முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - மே.இ.தீவுகள் மோதும் 3 -வது டெஸ்ட் இன்று துவக்கம்

புதன்கிழமை, 6 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

டொமினிக்கா, ஜூலை. - 6 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா ன 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று துவங்க இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி மே.இ.தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று துவங்க இருக்கிறது.
முன்னதாக கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கி ல் முன்னிலை பெற்றது. பின்பு ஜமைக்காவில் நடந்த 2 - வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
2 - வது டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த போதிலு  ம், மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே யான 3 - வது டெஸ்ட் போட்டி டொமினிக்காவில் இன்று இந்திய நே ரப்படி இரவு 7. 30 மணிக்கு துவங்க இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா டிரா செய்தாலே தொடரைக் கை ப்பற்றி விடலாம். கடந்த டெஸ்டைப் போலவே இந்த ஆடுகளமும் வேகப் பந்து வீச்சிற்கு ஏற்றவகையில் இருக்கும்.
எனவே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இது சவாலான ஆடுகளமாகும். இந்த டெஸ்ட் தொடரில் டிராவிட் மற்றும் லக்ஷ்மண் போன்ற அனுப வம் வாய்ந்த வீரர்களே தாக்குப் பிடித்து ஆடி, அணியின் மானத்தை காத்து வருகின்றனர்.
ரெய்னா அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளார். கேப்டன் தோனி 2 டெஸ்டிலும் சொதப்பி விட்டார். துவக்க வீரர்களில் விஜய் மோசமாக ஆடி வருகிறார். முகுந்த் 2 - வது டெஸ்டின் 2 -வது இன்னிங்சில் பொ றுப்புடன் ஆடினார்.
பந்து வீச்சைப் பொறுத்தவரை இஷாந்த் சர்மா மற்றும் பிரவீன் குமார் இருவரும் நன்றாக பந்து வீசி வருகின்றனர். அவர்களுக்கு பக்கபலமா க ஹர்பஜன் சிங் மற்றும் அமித் மிஸ்ரா இருவரும் உள்ளனர்.
ஆனால் 3 -வது பந்து வீச்சாளரான அபிமன்யு மிதுன் சரியாக பந்து வீசாததால் இந்த டெஸ்டில் அவருக்குப் பதிலாக முனாப் படேல் அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டெஸ்டில் டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நிலை இருப்பதால் இந்திய அணி வெற்றிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் டிரா செய்ய முயலும்.
அதே நேரத்தில் டொமினிக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெ ய்து வருகிறது. எனவே மழையின் அச்சுறுத்தல் இந்த டெஸ்டிலும் உள்ளது. கடந்த டெஸ்டைப் போலவே, மழையினால் ஆட்டம் பாதிக்கப் பட்டு டிரா ஆக வாய்ப்பும் உள்ளது.
மே.இ.தீவு அணியைப் பொறுத்தவரை ஒரு நாள் தொடரை இழந்து விட்டதால் டெஸ்ட் தொடரை டிரா செய்ய முயற்சிக்கும். எனவே இந்த டெஸ்டில் எப்படியாவது வெற்றி பெற போராடும் நிலை உள்ளது.
மே.இ.தீவு அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சர்வான் மோ சமாக ஆடி வந்தார். எனவே இந்த டெஸ்டில் அவர் நீக்கப்பட்டு அவரு க்குப் பதிலாக போவெல் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான இந்த 3 - வ து டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7. 30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபர ப்பாகிறது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்