முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சு ஜார்ஜ் மீண்டும் சாதனை படைப்பார் முன்னாள் பயிற்சியாளர் பாவல் நம்பிக்கை

புதன்கிழமை, 6 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜூலை. - 6 - லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நீளம் தாண்டும் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் சாதனை படைப்பார் என்று அவரது முன்னாள் பயிற்சியாளர் மைக் பாவல் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்திய தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் சமீப ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்க வில்லை. தற்போது அவர் ஒரு குழந்தைக்கு தாயா கி உள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் நீளம் தாண்டும் பிரிவில் அவர் பங்கேற்க இருக்கிறார். இதற்காக தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

அஞ்சு ஜார்ஜ் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் மைக் பாவலிடம் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க து. இதன் பலனாக கடந்த 2003 -ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற தடகள போட்டியில் அஞ்சு ஜார்ஜ் வெண்கபலப் பதக்கம் வென்றார். 

தற்போது, மைக் பாவல் சர்வதேச தடகள அமைப்பின் கவுரவ தூதரா க செயல்பட்டு வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மும்பை வந்து ள்ள அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது - அஞ்சு ஜார்ஜ் மீண்டும் தடகளத்திற்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நல்ல திறமையான வீரா ங்கனை. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயமாக, சாதிப்பார் என நம்புகிறேன். என் வாழ்த்துக்களையும் அவருக்கு கூறுகிறேன். 

தடகள வீராங்கனைகள் பொறுத்தவரை, திருமணமோ, குழந்தை பெ ற்றுக் கொள்வதோ ஒரு தடையில்லை. இன்னும் சொல்லப் போனால் பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் மனதளவில் இன்னும் பல மிக்கவ ர்களாகத்தான் ஆகிறார்ககள். இவ்வாறு அவர் கூறினார். 

அமெரிக்காவைச் சேர்ந்தவரான மைக் பாவல் (வயது 47) 1988 சியோ ல் ஒலிம்பிக், 1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளில் நீளம் தா   ண்டும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

தவிர, 1991 டோக்கியோ உலக சாம்பியன் போட்டி, 1993 -ம் ஆண்டு ஸ்டட்கார்ட்டில் நடந்த உலக சாம்பியன் போட்டிகளில் தங்கப் பதக் கம் வென்றவர் என்பது நினைவு கூறத்தக்கது. 

அமெரிக்காவின் நட்சத்திர வீரராக இருந்த மைக் பாவல், ஆடவர் நீள ம் தாண்டும் பிரிவில், 8.95 மீட்டர் தூரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார். இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள் ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்