முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்ஷேவுக்கு எதிராக வழக்குத்தொடர லண்டனில் தமிழர் அமைப்புகள் தீவிரம்

புதன்கிழமை, 6 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஜூலை - 6 - இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு  எதிராக போர்க்குற்ற வழக்கு தொடர லண்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் லண்டன் தொலைக்காட்சிகளில் ஒன்றான சேனல் 4 , இலங்கையில் நடக்கும் கொடூரங்கள் பற்றிய தகவல்களை குறும்படமாக வெளியிட்டு உலகையே பதைபதைக்க வைத்தது. ஐ.நா. சபையிலும் இந்த படம் போட்டுக்காட்டப்பட்டது. இதுகுறித்து உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்தன. என்றாலும் இதனை இலங்கை அரசு மறுத்துவருகிறது.
இந்நிலையில் சேனல் 4  தொலைக்காட்சியின் வீடியோ ஆதாரம் மற்றும் நேரடி சாட்சிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்து இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மற்றும் இலங்கை ராணுவத் தளபதிகள் 9 பேருக்கு எதிராக வழக்குத் தொடர லண்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆசிய மனித உரிமை மையம் உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்களும் இம்முயற்சியில் தமிழர் அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளன.
கடந்த முறை ராஜபக்ஷே இங்கிலாந்து சென்றபோது அவருக்கு அங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் அங்கு கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில் அவர் மீது போர்க்குற்ற வழக்கு தொடர லண்டன் கோர்ட்டில் தமிழர் அமைப்புகள் அனுமதி பெற்றன. இதனால் ராஜபக்ஷே  உடனடியாக நாடு திரும்பினார். தற்போது நார்வே, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ராஜபக்ஷே மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தி ஹேக் நீதிமன்றத்திலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அதற்கான சம்மனும் சமீபத்தில் ராஜபக்ஷேவுக்கு அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்