முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் - பிரணாப் தாக்கல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.1 -  மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்களுக்கு வரிசலுகை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகனுக்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:​

தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பு ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் முதியவர்களான அதாவது 80 வயதிலும் அதற்கு மேலும் உள்ளவர்களுக்கு வரிசலுகைகள் அளிக்கப்படும். தற்போது மூத்த குடிமக்களுக்கான வயது 65 ஆக இருக்கிறது. இதை 60 ஆக குறைக்கப்படும். 

தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வரி செலுத்துபவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் மிச்சமாகும். மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் மூத்த குடிமக்களுக்கு அதாவது 80 வயதிற்கும் மேல் உள்ளவர்களுக்கு வருமானவரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  அதேசமயத்தில் சேவை துறை விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் மூலம் பயணம் செய்தல், ஸ்டார் ஓட்டலில் தங்குபவர்கள் மற்றும் குளிர்சாதன வசதியுள்ள ரெஸ்டாரண்ட்களில் மதுபானம் குடிப்பவர்களுக்கு செலவு அதிகமாகலாம். பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மேலும் வரி சலுகை கிடைக்கும். 

நாட்டில் பணவீக்கம் குறைந்தாலும் இன்னும் கவலை அளிக்கக்கூடிய வகையில்தான் இருக்கிறது. அதேசமயத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையாலும் நடவடிக்கையாலும் வரும் மாதங்களில் பணவீக்கம் குறையலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு சராசரி பணவீக்க சதவீதம் குறைவாக இருக்கும். நாட்டில் உணவு பணவீக்கம் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20.4 சதவீதமாக இருந்தது. 

இது படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் 9.3 சதவீதத்திற்கு வந்துவிட்டது. பல்வேறு இடையூறுகளுக்கும் இடையே இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் தேவை மற்றும் சப்ளை விகித்தை சரிக்கட்ட வேண்டும். நடப்பு நதியாண்டில் முதல் அறையாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. 

நீண்டகாலமாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் பொருள்கள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை செயல்படுத்தும் வகையில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும். 

ஜிஎஸ்டி முறையை வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதியில் இருந்து அமுல்படுத்தப்படவிருந்தது. ஆனால் அதற்கான திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாமல் இருந்தது. இந்த மசோதா நிறைவேற வேண்டுமென்றால் பாராளுமன்ற இருசபைகளிலும் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி வேண்டும். இந்த மசோதா நிறைவேறினால் பாராளுமன்றத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கும் அதிகாரம் கிடைக்கும். 

விவசாயம் மற்றும் சேவை துறைகளில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் கடந்த டிசம்பர் மாதம் முடிய 9 மாதத்தில் வளர்ச்சி விகிதம் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதத்தில் இருந்து 1.6 சதவீதம் குறைந்திருந்தது. முதலீடு, இன்சூரன்ஸ், ரியல் ஸ்டேட், வர்த்தக சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் முடிய வளர்ச்சி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வளர்ச்சி விகிதம் வெறும் 8.5 சதவீதமாக இருந்தது. மின்சார துறை, கியாஸ், மற்றும் தண்ணீர் சப்ளை ஆகிய சேவைதுறையிலும் வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

ஏழைகளுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மான்யங்கள் சரியாக அவர்களுக்கு போய் சேருவதில்லை. இந்த மான்யங்கள் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழைகளுக்கு மண்ணெண்ணெய் மான்யம் மற்றும் உரம் மான்யதுக்கான பணம் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இது அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். மண்ணெண்ணெய்,கியாஸ், மற்றும் உர விநியோகம் சரியான முறையில் கிடைக்க இந்த வழிவகையை கையாளப்படும். இதற்கான விதிமுறைகளை நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு உருவாக்கி வருகிறது. இதன் இடைக்கால அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

மத்திய எக்சைஸ் வரியை கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவுக்கு குறைக்க முடியாது. 10 சதவீத எக்சைஸ் வரி தொடரும். மேலும் 130 வகையான பொருட்களுக்கு ஒரு சதவீத எக்சைஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் அடிப்படை தேவையான உணவு மற்றும் எரிபொருள்களுக்கு வரிவிலக்கு தொடரும். தங்கம் மற்றும் வைர கற்கள் புதிய வரிவிதிப்புக்கு உட்படாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago