முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் நம்பர் - 1 பந்து வீச்சாளராக விரும்புகிறேன் - எட்வர்ட்ஸ் பேட்டி

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

டொமினிக்கா, ஜூலை. - 7  - உலகின் நம்பர் - 1 பந்து வீச்சாளராக விரும்புகிறேன் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான எட்வர் ட்ஸ் தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன 3 -வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டொமினிக்கா வில் நேற்று துவங்கியது. இந்தப் போட்டி டிராவில் முடிந்தாலே இந்தியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி விடும். முதல் டெஸ்டில் இந்தியா 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிராவானது. இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று 2 - 0 என்ற கணக்கில் தொட ரைக் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கனவே ஒரு நாள் தொட ரை 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
அதே நேரத்தில், மே.இ.தீவு அணி இந்த டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்யும் நிலையில் உள்ளது. இதற்காக அந்த அணி புதிய வியூக த்துடன் களம் இறங்கி உள்ளது.
மே.இ.தீவு அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கை விட பெளலிங் கில் சிறப்பாக உள்ளது. வேகப் பந்து வீச்சில் எட்வர்ட்ஸ், ராம்பால் மற்றும் டேரன் சம்மி ஆகியோர் முத்திரை பதித்து வருகின்றனர்.
இதில் எட்வர்ட்ஸ் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். இரண்டு டெஸ்டில் 13 விக்கெட் கைப்பற்றி உள்ளது நினைவு கூறத்தக்கது.
உலகின் நம்பர் - 1 வேகப் பந்து வீச்சாளராக விரும்புவதாக எட்வர்ட்ஸ் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது - எனது இலக்கு என்பது முதல் நிலையில் இருப்பது தான்.
உலகின் நம்பர் -1 பெளலராக வேண்டும் என்பதே என் லட்சியம். கடந்த சில ஆண்டுகளாக நான் அணியில் இடம் பெறவில்லை. தற்போது எனது பெளலிங் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ரிவர்ஸ் ஸ்விங் நன்றாக உள்ளது.
இந்தத் தொடரில் ராம்பாலுடன் இணைந்து நான் பந்து வீசினேன். இருவரும் தொடக்கத்திலேயே நன்றாக பந்து வீசுகிறோம். எங்கள் இருவரது பந்து வீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக் கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த டெஸ்ட் துவங்குவதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கால்பந்து விளையாடினார்கள். இதில் இஷாந்த் சர்மாவும், பிரவீன் குமாரும் ஆடும் போது, மோதிக் கொண்டனர்.
இதனால் சர்மாவுக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இது சரியாகி விட்டதால் அவர் கடைசி டெஸ்டிற்கு தகுதி பெற்று விட்டார். கடந்த டெஸ்டில் அவர் 10 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்