முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.தலிபான் அமைப்பு தீவிரவாத இயக்கமாக கனடா அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

டொரண்டோ,ஜூலை.- 7 - பாகிஸ்தான் நாட்டில் இருந்து கொண்டு செயல்பட்டு வரும் தலிபான் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று கனடா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அந்த இயக்கத்தை ஒழிக்க அமெரிக்க கூட்டுப்படைகள் போரிட்டு வருகின்றன. ஏறக்குறை அந்த தலிபான் தீவிரவாத இயக்கம் ஒடுக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து தப்பிய தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஊடுருவி தெஹ்ரிக்-இ- பாகிஸ்தான் தலிபான் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கடந்த ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. அதனை அடுத்து கனடாவும் இந்த தெஹ்ரிக்-பாகிஸ்தான் தலிபான் என்ற அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்புதான் என்று அறிவித்துள்ளது. இதை அந்த நாட்டு பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் விக் டோவ்வுஸ் நேற்று டொரண்டோவில் தெரிவித்தார். இனிமேல் கனடா நாட்டு கிரிமினல் சட்டவிதிகளின் கீழ் இந்த தெஹ்ரிக்-இ-பாகிஸ்தான் தலிபான் இயக்கம் வரும் என்றும் அந்த அமைச்சர் கூறினார். தீவிரவாதத்தை முக்கிய சவாலாக கனடா எதிர்நோக்கியுள்ளது. தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உண்மைதான். இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது. அதனால் தீவிரவாதத்தை உன்னிப்பாக கவனிப்பதோடு எதிர்த்து போராடியும் வருகிறோம் என்றும் அமைச்சர் தோவ்வுஸ் தெரிவித்தார். பாபர் கல்சா, விடுதலைபுலிகள் இயக்கத்தை அடுத்து தெஹ்ரிக்-இ-பாகிஸ்கான் தலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்