முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபுதேவா - ரம்லத்துக்கு விவாகரத்து கிடைத்தது

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.8 - நடிகர் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி ரம்லத்துக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மனமொத்த இருவரும் விவாகரத்து செய்வதாக மனு அளித்ததின் பேரில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

நடிகர் பிரபுதேவாவும் அவரது மனைவி ரம்லத்தும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ரம்லத்துக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் தரவும் பிரபுதேவா ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு கடந்த 30-​ந்தேதி விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. பின்னர் கடந்த சனிக்கிழமை திடீரென்று ஆஜராகி வழக்கு விசாரணையை உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியம் மற்றும் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. தீர்ப்பு நேற்று தள்ளி வைக்கப்பட்டது.  நேற்று காலை சென்னை முதன்மை குடும்ப நலக் கோர்ட்டு nullநீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன் வழக்கு விசாரணை நடந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு வீடும், அண்ணாசாலையில் உள்ள ஒரு வீடும் ரூ.10 லட்சம் ரொக்கமும் ரம்லத்துக்கு ஜீவனாம்சமாக பிரபுதேவா வழங்கினார். ஐதராபாத்தில் உள்ள 3 பிளாட்டுகளை குழந்தைகளுக்கு கொடுத்தார். 

நடிகர் பிரபுதேவா திரையுலகில் கால் பதித்த நேரத்தில் நடன குழுவில் இருந்த ரம்லத்தை காதலித்து மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிரபுதேவாவின் மூத்த மகன் கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனான். அதுமுதல் துக்கத்திலிருந்த பிரபுதேவா படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார். அப்போது நடிகை நயன்தாராவிற்கும், பிரபுதேவாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்த இந்த ஜோடி ஆரம்பத்தில் தங்களுக்குள் தொடர்பு இல்லை என்று மறுத்தது. பின்பு தங்கள் காதலை பகீங்கரமாக வெளிப்படுத்தினர். இதனால் மனைவி ரம்லத் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பிரபுதேவா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆரம்பத்தில் மறுத்த ரம்லத், பிறகு பரஸ்பரம் பேசி உரிய இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டதின் பேரில் விவாகரத்து வழங்க ஒத்துக் கொண்டார்.   இதையடுத்து பிரபுதேவா, ரம்லத்துக்கு விவாகரத்து வழங்கி nullநீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!