முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஷிங்டனில் பிறந்த நாளை கொண்டாடிய தலாய்லாமா

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.8 - அமெரிக்கா சென்றுள்ள திபெத்தியர்களின் மத தலைவர் தலாய்லாமா தனது 76 வது பிறந்த நாளை அங்கு கொண்டாடினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு வந்த தலாய்லாமாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். வாஷிங்டனில் 2 வாரம் தங்கியிருக்க அவர் திட்டமிட்டுள்ளார். 

தலாய்லாமாவை உலக நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேசுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் 2 வாரம் அமெரிக்காவில் தங்க திட்டமிட்டுள்ள அவரை அதிபர் ஒபாமா சந்தித்து பேசுவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற பிரதிநிதிகள் தலாய் லாமாவை சந்திக்க உள்ளனர். 

திபெத் விவகாரங்களை கவனித்து வரும் அமெரிக்க அதிகாரி ஒருவரும் தலாய்லாமாவை ஏற்கனவே சந்தித்துள்ளார். அமெரிக்காவில் தங்கியிருக்கும் அவர், திபெத்தியர்களிடையே மத சொற்பொழிவு ஆற்ற உள்ளார். மேலும் தியான வகுப்புகள் மற்றும் உலக அமைதிக்கான சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட உள்ளது. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்