முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் தரவரிசை இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் பேட்டிங் பட்டியலில் முதலிடம்

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      விளையாட்டு

துபாய், ஜூலை. - 9  - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள சமீபத்திய மகளிர் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னா ள் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் மொத்தம் 796 புள்ளிகள் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றி இருக்கிறார். மே.இ.தீவு வீராங்கனை ஸ்டாபினி டெய்லர் 2 -வது இடம் பெற்று இருக்கிறார். அவர் பெற்ற மொத்தப் புள்ளிகள் 743 ஆகும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான ஷெல்லி நிட்ஸ்கே 3 - வது இடம் பெற்றறு உள்ளார். அவர் பெற்ற மொத்த புள் ளிகள் 701 ஆகும். அவர் நேற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நியூசிலாந்து அணியின் கேப்டனான அய்மி வாட்கின்சும் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்று பெற்றது நினைவு கூறத்தக்கது. அவர் இந்த பட்டியலில் 9 -வது இடம் பெற்று உள்ளார். அவரது கிரிக் கெட் வாழ்க்கையில் இது அதிகபட்சமாகும்.
ஐ.சி.சி.யின் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிக்கான தரவரி சையில் இந்திய அணி தொடர்ந்து 3 -வது இடத்தைத் தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நியூசிலாந்து அணியை நேற் று முன் தினம் தோற்கடித்தது.
இந்த தரவரிசைப் பட்டியல் நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித் துள்ளது. அந்த அணி 2 -வது இடத்தில் இருந்து 4 -வது இடத்திற்கு பின் தங்கியதே இதற்கு காரணமாகும்.
ஒரு நாள் தொடரின் இறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து உள்ளது. இந்தப் போட்டி துவங்கும் போது, 4 -வது இடத்தில் இருந்த ஆஸ் திரேலியா 2 -வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில், 34 வயதான ஆஸ்திரேலிய வீராங்கனை நிட்ஸ்கேயும், இங்கிலாந்து வீராங்கனை கேதரின் பிரண்டும் முதலிடத்தில் உள்ளனர். இந்திய வீராங்கனை ஜூலான் கோஸ் வாமி 3 -வது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து தொடரில் கோஸ்வாமி அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர் இந்த முன்னேற்றத்தை பெற்று இருக்கிறார். அவர் உலக முன்னாள் நம்பர் - 1 வீராங்கனை யாவார்.
27 வயதான மிதாலிக்கு நியூசிலாந்திற்கு எதிரான இந்தத் தொடர் நல் ல தொடராக அமைந்தது. அவர் கடந்த 5 -ம் தேதி நடந்த போட்டியில் 31 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். இது அவரது சிறப்பம்ச மாகும்.
தவிர, நியூசிலாந்தைச் சேர்ந்த நிக்கோலா பிரவுன் மற்றும் இங்கிலாந் தைச் சேர்ந்த லூரா மார்ஷ் இருவரும் இணைந்த 5 -வது இடத்தில் உள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனையான கெளத்தர் சுல்தானா 9 -வ து இடம் பெற்று இருக்கிறார்.
அவர் முதல் முறையாக டாப் - 10 - ல் இடம் பெற்று இருக்கிறார். ஆஸ்திரேலிய முன்னணி வீராங்கனையான நிட்ஸ்கே ஒரு நாள் போ  ட்டிக்கான தரவரிசையில் ஆல்ரவுண்டர்கள் ப

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்