தெற்கு சூடான் நாட்டுக்கு உதயம்: வைகோ வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூலை.- 1 1- புதிதாக உருவாகி உள்ள தெற்கு சூடான் நாட்டுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச பூச்செடியில் புதிதாக ஒரு மலர் பூத்துள்ளது. தெற்கு சூடான் விடுதலை நாள் கொண்டாட்டங்களில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன், அமெரிக்க குடியரசின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட பன்னாட்டு அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவும் தன் பங்குக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியை அனுப்பி வைத்துள்ளது. நைல் நதி தீரத்தில் இந்த கருப்பர் நாடு மலர்ந்திட அம்மக்களிடம் பொது வாக்குப் பதிவை நடத்தியது. இந்த தீர்வை தானே தமிழ் ஈழ மக்களும் கேட்கிறார்கள் என்று வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: