முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

டோக்கியோ, ஜூலை - 11 - ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நாடு பூகம்ப மண்டலத்திற்குள் இருக்கிறது. இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது சகஜமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் பயங்கர பூகம்பமும், அதனைத்தொடர்ந்து சுனாமி பேரலையும் ஏற்பட்டது. இதில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். வீடுகள், கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தனர். கடலோரத்தில் இருந்த அணு மின்சார நிலையம் ஒன்றும் பாதிக்கப்பட்டது. இந்த பூகம்ப பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்பாக நேற்று அந்நாட்டில் அதிக சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்கடர் அளவையில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் பூகம்பம் ஏற்பட்ட அதே பகுதியில்தான் இப்போதும் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானின் வடக்கு பசிபிக் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. ஹான்சி தீவுக்கு அப்பால் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் ஏற்பட்ட அதே கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்றைய பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தினால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்