முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு: பாக். நீதிமன்றத்தில் ஆதாரங்கள் தாக்கல்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூலை.- 11 - மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்கள் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.  பாகிஸ்தான் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் இந்த ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மும்பை தாக்குதல் தொடர்பாக லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஷகியூர் ரஹ்மான் லக்வி உட்பட 5 பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் மீதான வழக்கு அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் தேசிய விசாரணை அமைப்பு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஸ்கர் பயங்கரவாதிகள்தான் மும்பை தாக்குதலுக்கு காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில் தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் வாக்குமூலம், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது.
இந்த ஆதாரங்கள் இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆதாரங்களின் பிரதிகள் குற்றவாளிகளுக்கும், அவர்களின் வக்கீல்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் 5 பேர் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். இப்போது புதிய நீதிபதி ஷாகித் ரபீக் இந்த வழக்கை விசாரிக்கிறார். ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின் வழக்கு விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2008 ல் நவம்பர் 26 ல் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பை நகருக்குள் புகுந்து ரயில்நிலையம், ஓட்டல்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தினர். இதில் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மும்பை சிறையில் உள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago