எம்.எல்.ஏ.தங்கதமிழ்செல்வன் இல்லத்திருமண விழா பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

கம்பம்,ஜீலை.- 11 - தேனி மாவட்டம் கம்பம் யாதவ் மஹாலில் தேனி மாவட்ட அதிமுக செயலாளரும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏவும் மான தங்கதமிழ்செல்வன் இல்லத்திருமண விழா நடைபெற்றது.அண்ணா நிர்வாக பணியாளர் சங்கம் செயலாளர் தங்கபன்னீர் செல்வம் ,இந்திராணி தம்பதியர்களின் மகன் பி.பிரசாத்துக்கும்,எழுமலை அரசுமேல்நிலைபள்ளி முதுகலை ஆசிரியர் பி.அசோக்குமார் .ஏ.ஆனி ஜீலியட் தம்பதிகளின் மகளுமான ஏ.விவியன் ஸ்டெபி  நீருவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.இவர்களின் திருமணத்தை மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,மணமக்களை வாழ்த்தி பேசினார்.விழாவில் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான் ,கம்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர் நாகராஜன்,ஒன்றிய செயலாளர் இளையநம்பி,துணை செயலாளர் ராஜாமணி காந்திநகர் நகர பொருளாளர் ஜெகநாதன்,முருகன்,நகரபொருளாளர் ஏ.கே.சி.கருணாமூர்த்தி,மற்றும் நகர சிறுபான்மை பிரிவு நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: