முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி சென்னை வருகிறார்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை - 11 - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வருகிற 19 ம் தேதி சென்னை வருகிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தார். அப்போது இந்தியா-அமெரிக்க நாடுகளிடையே நல்லுறவு குறித்தும், அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.  இந்த நிலையில் ஹிலாரி கிளிண்டன் மீண்டும் இந்தியாவுக்கு வருகிற 19 ம் தேதி வருகிறார். இங்குள்ள அதிகாரிகளுடன் அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறுகிறது. இவருடன் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் பலரும் வருகிறார்கள்.
தீவிரவாத ஒழிப்பு, அண்டை நாடுகள் மூலம் பிரச்சனைகள் ஏற்படும்போது, ராணுவ பாதுகாப்புக்காக இரண்டு நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஒத்துழைப்பு நடவடிக்கைகள், வர்த்தக மேம்பாடு, விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்ற விபரங்களில் 2 நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய பங்களிப்புகள் பற்றியும் ஹிலாரி கிளிண்டன் இந்திய தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் எதிர்கொள்ளும் மேலும் சில பிரச்சனைகள் குறித்தும் அவர் இந்தியாவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் ஆலோசனை நடத்துவார்.
மேலும் இந்த சுற்றுப்பயணத்தின்போது ஹிலாரி கிளிண்டன் சென்னை வருகிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஏற்றபிறகு அவர் சென்னை வருவது இதுவே முதல்முறையாகும். போக்குவரத்து வாகன உற்பத்தி, தொழில் முதலீடுகள் ஆகியவற்றில் சென்னை சிறப்பிடம் பிடித்திருப்பதால் அவரது சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தகவல்களை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்