முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி தேனியில் ஆர்ப்பாட்டம்- ஸ்ரீதர்வாண்டையார் அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 11 - பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி தேனியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதுரையில் மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்தார்.    மதுரையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க கோரி அடுத்த மாதம் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி தேனியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இன்னும் கனிமொழியை சிறையில் வைத்திருக்க தேவையில்லை. ஒரு வழக்கு விசாரணை முடியும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இலலை. இதே கருத்தை பிரபல ஆங்கில ஏடுகளும், பாஜக தலைவர்களும் கூறியுள்ளனர். எனவே கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை நீக்கி விட்டு இந்த ஆண்டே சமச்சீர்கல்வி திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றார்.
 முன்னதாக மதுரை வந்த ஸ்ரீதர் வாண்டையாரை மாநில துணைதலைவர் ஒச்சாத்தேவர், மாவட்ட தலைவர் வக்கீல் சுரேஷ், சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago