கொள்ளையடிப்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா? -ஈ.வி.கே.எஸ். இளங்கோவின்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை - 11 - கொள்ளயடிப்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா? என்று தி.மு.க.வுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவின் கேள்வி எழுப்பியுள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: லோக்பால் மசோதாவில் முன்னாள் முதல்வர்களையும் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் முதலில் பிடிபடும் வழக்கு கோபாலபுரமாகத்தான் இருக்கும். போலீசை பார்தது பயப்படும் பரம்பரையில் வந்தவன் நான் அல்ல. ஒரு ராத்திரியில் போலீஸ் பிடித்தபோது அய்யோ, அம்மா என சத்தம் போட்ட தலைவன் வழியில் வந்தவர்கள் நீங்கள் காங்கிரசை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும். தயதுசெய்து காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்காதீர்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் கூறவேண்டும். உங்களோடு இருந்தால் தோற்றுவிடுவோம் என நான் கடந்த ஒன்றரை  வருடங்களாக கூறிவருகிறேன். ஆனால் ஏதோ தியாகம் செய்ததுபோல் பேசுகிறார்கள்.  மாவீரன் என்று சொல்கிறார்களே, அந்த அன்புச் சகோதரர் இப்போது மதுரையில் வீரத்தை காட்டட்டும். கொள்ளையடிப்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா? இளைஞர் பட்டாளத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் காங்கிரசுக்கு இப்போது வந்துவிட்டது. லஞ்சத்தை விஞ்ஞான ரீதியில் செய்தவரே கருணாநிதிதான். தற்போது தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக உள்ளது. ஒரு இடத்தில் நல்லது நடந்தால் அதை வரவேற்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: