முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பிரச்சினை பேச்சுவார்த்தை தொடரும்:குலாம் நபி ஆசாத்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

ஜம்மு,ஜூலை.- 10 - தனி மாநில தெலுங்கானா கோரிக்கைக்காக பதவியை ராஜினாமா செய்து எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்முவிற்கு வந்த குலாம் நபி ஆசாத்திடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டதற்கு, தெலுங்கானா கோரிக்கைக்காக பதவி விலகிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தொடரும். அது இன்னும் நிறைவடையவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!