Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 - தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க இடமாற்றம் செய்யப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் கோயிலை மீண்டும் அதே இடத்தில் புனரமைத்து வழிப்பட தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை பொது நிதியிலிருந்து ரூ.18.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோயில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோயிலில், ஆலமரத்தின் அடிப்பாகத்தில் இயற்கையாகவே விநாயகர் எழுந்தருளியுள்ளதால் ஆலமர இயற்கை விநாயகர் என்ற பெயரைப் பெற்றது. இத்திருக்கோயிலுக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குடியிருப்போர் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு புதிய சட்டமன்றப் பேரவை வளாகம் கட்ட அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ள இடம் தேவை என்பதால் இத்திருக்கோயிலை வேறு இடத்திற்கு மாற்றியமைப்பது குறித்து கடந்த அரசால் ஆராயப்பட்டது.  இதற்கிடையில், தற்போதுள்ள இயற்கை விநாயகர் ஆலமரத்தில் இயற்கையாக உருவான விநாயகர் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள ஆலய இடம் ஆகியவற்றை மாற்றியமைப்பதை எதிர்த்து 29.8.2008 அன்று பொது நல வழக்கு nullபேராணை மனு எண்.21621/2008 மற்றும் பலவகை மனு எண்.1/2008 சென்னை உயர்நீnullதிமன்றத்தில் தொடரப்பட்டது.  இவ்வழக்கு குறித்து விசாரித்த முதன்மை அமர்வு nullநீதிமன்றம், 4.9.2008 அன்று பொது நல வழக்கு தாக்கல் செய்த மனுதாரர், 29.8.2008 அன்று பொதுப்பணித் துறை செயலாளரிடம் அளித்துள்ள மனுவினைப் பரிசீலித்து ஆணை பிறப்பிக்குமாறு  தீர்ப்பளித்தது.  இதன் அடிப்படையில் 11.11.2008 அன்று அரசு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோயிலில் உள்ள இயற்கையாக தோன்றிய ஆலமர விநாயகரை அப்படியே விட்டு விட்டு, அதனைச் சுற்றிலும் சுமார் 6 அடி சுற்றளவிற்கு வேலி அமைத்துக் கொடுக்கவும், 2400 சதுர அடி இடத்தை பெயரளவு வாடகையில் ஒதுக்கீடு செய்யவும் ஆணையிட்டது. மேலும், இத்திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்தில் இந்து  சமய அறநிலையத் துறையே அவர்களின் நிதி ஆதாரத்திலிருந்து மேற்படி கோயிலை கட்டிக் கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.    

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்த ஆலமர இயற்கை விநாயகரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த விஷ்ணு, துர்கை, சரஸ்வதி, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் போன்ற 23 பரிவார மூர்த்திகளை அகற்றி, பொதுப்பணித் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.  இவ்வாறு இயற்கை ஆலமர விநாயகர் ஒரு இடத்திலும், ஏனைய பரிவார மூர்த்திகள் வேறு ஒரு இடத்திலும் அமையப் பெறுவது வழிபாட்டுக்கு உகந்ததல்ல என பக்தர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.  இதை அறிந்த  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இத்திருக்கோயிலை புனரமைத்திடவும், பரிவார மூர்த்திகளை ஆகம விதிகளின்படி மீண்டும் நிர்மாணம் செய்திடவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர்  உத்தரவின்படி, 23 பரிவார மூர்த்திகளையும் மீண்டும் நிர்மாணிக்கவும், கருவறை, நுழைவு வாயில், அம்பாள் சமேத சிவன், நவக்கிரக சன்னதி ஆகியவற்றை அமைப்பதோடு, மேற்கூரையும், தரைத்தளமும் அமைக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வலம் வந்து ஆலமர இயற்கை விநாயகரையும், பரிவார மூர்த்திகளையும் வழிபடத்தக்க வகையிலும், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தத் திருப்பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகையான 18.50 லட்சம் ரூபாயும் இந்து சமய அறநிலையத் துறை பொது நல நிதியிலிருந்து வழங்கப்படும்.இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil ComedyRhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kidsகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Reviewஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்: