முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு ரபி பெர்னாட் மனுதாக்கல்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 -  ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ரபி பெர்னாட் நேற்று மனுதாக்கல் செய்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.பி. பதவியை ராஜனமா செய்தததையொட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ரபி பெர்னாடை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையொட்டி ரபி பெர்னாட் நேற்று 12.10 மணியளவில் அ.தி.மு.க சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, கே.கருப்புசாமி, முகமதுகான் உள்ளிட்டவர்களும், வடசென்னை மாவட்ட  செயலாளர் பாலகங்கா எம்.பி ஆகியோர் உடனிருந்தனர். மனுதாக்கல் செய்த பின்னர் வெளியே வந்த ரபி பெர்னாட் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அ.தி.மு.க.வின் எளிய தொண்டனாகிய என்னை இந்த இடைத்தேர்தலில் பெரும்தன்மையோடு வாய்ப்பு தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. 

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (12.7.11) கடைசி நாள். நாளை வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. 15-ந்தேதியன்று இறுதி வேட்பாளர் வேட்பாளர் பட்டியல் வெளியீடப்படும். போட்டி இருந்தால் 22-ந்தேதியன்று தேர்தல் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்