முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.இ. படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.12 - கலந்தாய்வு மூலம் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவர்களிடம் இருந்து அண்ணா பல்கலைக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.  வரும் 23 ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான முதுநிலை பொறியியல் படிப்புகளில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இந்த கலந்தாய்வினை நடத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு சூசூசூ.ஹடூடூஹசீடூடுசு.டீக்ஷசீ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலை பொறியியல் படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ் சேருபவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அத்துடன் பொறியியல் பட்டதாரி நுண்ணறிவு தேர்வு கேட் அல்லது தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு டான்செட் எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago