முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கிருஷ்ணகிரி ஜூலை.12 - கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற கால்வாய், வலதுபுற கால்வாய் மற்றும் கிளை கால்வாய்கள் மூலம் 8000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 11.07.2011 முதல் 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டார். அதற்கிணங்க இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரன், கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டார். 

இந்நிகழ்ச்சிக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பின கிருணமூர்த்தி, ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் 11.07.2011 முதல் 7.12.2011 வரை 150 நாட்கள் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கிணங்க இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இடதுபுற கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களின் மூலம் திறந்துவிடப்படும் 64 கன அடி தண்ணீரால் 5918 ஏக்கரும், வலதுபுற கால்வாய் மூலம் திறந்து விடப்படும் 26 கன அடி தண்ணீரால் 2,082 ஏக்கரும் ஆக மொத்தம் 8ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். 

கெலவரப்பள்ளி அணையின் மொத்த தண்ணீர்மட்டம் 44.26 அடியாகும். இன்று தண்ணீர்மட்டம் 41.16 அடியாக உள்ளது. இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் தட்டகானப்பள்ளி, திக்நத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுகி, நல்லகானகொத்தப்பள்ளி, மருதாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்கள் பயனடையும். கெலவரப்பள்ளி ஆயகட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் nullரினை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் சுந்தரம், உதவி பொறியாளர் கிருஷ்ணவேணி, உதவி இயக்குநர் (வேளாண்மை) .நாகராஜ், வட்டாட்சியர் லட்சுமி நாராயணன் மற்றும் ஆயக்கட்டு தலைவர்கள் ராசப்பா, நாராயணசாமி, சின்னப்பா, வெங்கடசாமி, பிரபா, முனிராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்