முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் இலவச டி.வி.க்களுடன் நகராட்சி முற்றுகை

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

கொடைக்கானல், மார்ச்.1 - கொடைக்கானலில் தமிழக அரசின் இலவச கலர் டி.வி.க்களுடன் நகர்மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் 23வது வார்டு சத்யா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்பட்டது. ஆனால் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சியிடமும், மின்வாரியத்திடமும் பலமுறை புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மின்சாரமே வழங்கப்படாத நிலையில் எங்களுக்கு இலவச கலர் டி.வி.க்கள் தேவையில்லை என்று இப்பகுதி பொதுமக்கள் கூறி வந்தனர். இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் என்பவர் நகராட்சியிடம் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முறையற்ற அனுமதியின்றி குடிசை போட்டுள்ளதாகவும் எனவே இவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்கக்கூடாது என்றும் கூறியதால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வந்தனர். இதனால் டி.வி. வாங்கிய பொதுமக்கள் தாங்கள் வாங்கிய டி.வி.யுடன் நகர்மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்படவே, நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராகீம் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் மறியலைக் கைவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்