முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி: ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை,12 - சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக முன்னாள் ஆசிரியர் மனோண்மணி தொடர்ந்துள்ள வழக்கு தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதாடினார். 

அப்போது அவர் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். இவரது வாதம் முடிவுற்றதும் அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் பேச முயன்றபோது,  தலைமை நீதிபதி இக்பால்,  சமச்சீர் கல்வி குறித்து ஆராய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் கருத்துகளை தனித்தனியாக சீலிட்ட கவரில் நாளை (இன்று) சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு தொடரும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், சமச்சீர் கல்வி குறித்து இந்த வாரத்திற்குள் தீர்ப்பளிக்கப்பட வேண்டியுள்ளதால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்