முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரராமன் கொலை: விசாரணை முடிந்தது

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.12 - சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயேந்திரர், ஜெயேந்திரர் உள்பட 24 பேரும் வருகிற 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராமசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவரானார். 

இந்த வழக்கில் அரசு சாட்சிகளாக 370 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதில் 92 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். 

இந்த வழக்கில் இறுதியாக வழக்கின் விசாரணை அதிகாரி சக்திவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சக்திவேல் கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

நேற்றுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ராமசாமி வருகிற 18​-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். 

மேலும் அன்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!