முக்கிய செய்திகள்

வீண் செலவுகளைக் குறைக்க சிக்கன நடவடிக்கை: பிரணாப்

Image Unavailable

புதுடெல்லி, ஜுலை 13 - வீண் செலவுகளைக் குறைக்கவும் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் இதர செலவினங்களில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்தார். அரசு துறைகளில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தான் குறிப்பு அனுப்பியுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். சில குறிப்பிட்ட துறைகளில் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக அந்த நிதியை செலவிட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் வீண் செலவுகளைக் குறைக்கவும், நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் தான் இந்த சுற்றறிக்கையை அரசு துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை கூடுமான அளவிற்கு குறைக்க வேண்டும். இதர செலவினங்களையும் குறைக்க வேண்டும் என்று இந்த சுற்றறிக்கையில் அரசு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: