முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கல்லூரி இடஒதுக்கீடு: அன்பழகன் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.13 - புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பொறுப்பு ஏற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அரசின் செயல்பாடுகள் பல்வேறு குறைபாடுகளையும், குழப்பங்களையும் கொண்டதாகவே உள்ளது. தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு, கட்டண நிர்ணயம் போன்றவற்றில் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்னன்ன தவறுகளை செய்ததோ அதே தவறுகளை ரங்கசாமி முதல்வராக பொறுப்பு ஏற்ற பிறகும் செய்து வருகிறார். 

தேர்தலின் போது காங்கிரஸ் அரசை விமர்சித்த ரங்கசாமி, அந்த அரசின் தவறுகளையே தொடருகிறார். 

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு இடம் பெற அரசாணை வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.க. ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறாவிட்டால் அதை கையூட்டு பெற்றதாகவே அர்த்தம் என்றும் கூறியிருந்தோம். ஆனால் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்துவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த ரங்கசாமி, ரகசியமாக கூட்டம் நடத்தி கட்டப்பஞ்சாயத்து போல பேரம் பேசி கடந்த ஆண்டு பெற்ற அரசு இடங்களையே மீண்டும் பெற்றுள்ளார். 

மொத்தம் உள்ள 900 எம்.பி.பி.எஸ். இடங்களில் 450 இடங்களை பெறுவதற்கு பதிலாக வெறும் 265 இடங்களையே பெற்றுள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு ரங்கசாமி துணை போயிருக்கிறார். கூடுதல் இடம் பெற சிறு முயற்சிகளை கூட ரங்கசாமி செய்யவில்லை. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பார்த்து வெளிப்படையான நிர்வாகம் செய்ய புதுவை அரசு கற்றுக் கொள்ள வேண்டும். 

இதேபோல புதுவையில் 130 உயர் மருத்துவ கல்வி இடங்கள் உள்ளன. அதில் 65 இடங்களை அரசு பெற வேண்டும். ஆனால் ஒரு சீட்டை கூற அரசு முயற்சிக்கவில்லை. முதல்வர் ரங்கசாமி ஆட்சியை மனம் போன போக்கில் செய்து வருகிறார். அரசின் அனுமதியை பெறாமலேயே தனியார் பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி பின்னர் தாங்களாகவே கட்டணத்தை குறைத்து விட்டதாக அவர்களே அறிவிப்பும் வெளியிட்டனர். ஆனால் உண்மையிலேயே கட்டணத்தை குறைக்கவில்லை. கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி பதவிகளின் காலம் நாளையுடன்(இன்றுடன்) முடிவடைகிறது. ஆனால் தேர்தல் நடத்த ஆணையரை கூட அரசு இதுவரை நியமிக்கவில்லை. 

அதிகாரங்களை பகிர்ந்தளிக்க அரசு முன்வரவில்லை. எனவே மாநில தேர்தல் ஆணையரை நியமித்து தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago