முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்டில் தோனியின் முடிவு: பயிற்சியாளர் கருத்து

புதன்கிழமை, 13 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

டொமினிக்கா, ஜூலை. 13 - மே.இ.தீவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனியின் முடிவு சரியானது தான் என்று இந்திய அணியின் பயிற்சியாளரான டன்கன் பிளட்சர் தெரிவித் தார். இது பற்றிய விபரம் வருமாறு - 

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் கைப் பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன்னில் வெற்றி பெற்றது. பிரிட்ஜ்டவுன் மற்றும் டொமினிக்காவில் நடந்த 2 -வது மற் றும் 3 -வது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. 

இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2 - 0 என்ற கணக்கில் வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வாய்ப் பு இருந்தும் டிரா செய்யும் வகையில் இந்திய வீரர்கள் விளையாடினா ர்கள். 

இந்திய அணிக்கு 47 ஓவரில் (கூடுதலான 13 ஓவரையும் சேர்த்து ) 180 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து இருந்த போது, கேப்டன் தோனி ஆட்டத் தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். 

கூடுதலான 13 ஓவரை ஆடுவதற்கு முன்னதாகவே ஆட்டத்தை முடித் துக் கொண்டார். 90 பந்தில் 80 ரன் தேவை என்ற நிலையில் இருந்த போது, ஆட்டத்தை அவர் முடித்துக் கொண்டது ஆச்சரியம் அளித்தது. 

வெற்றிக்காக போராடாமல் டிரா செய்யும் வகையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டார். டிரா செய்யும் வகையில் தான் ஆட்டத்தை முன் கூட்டியே முடித்தது சரிதான் என்று தோனி நியாயப்படுத்தினார். 

தொடரை கைப்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு விடக் கூடாது என்று கரு தி தான் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்தார். வெற்றிக்கா க ஆடாமல் தோனி முன்னதாக ஆட்டத்தை முடித்தது சரியான முடிவு தான் என்று பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் நியாயப்படுத்தி உள்ளார். 

இந்த ஆடுகளத்தில் ரன் இலக்கை நோக்கி ஆடுவது சவாலானது. 2-வ து இன்னிங்சை இந்தியா ஆடுவதற்கு முன்பே இதை தெரிவித்தேன். அதற்கு ஏற்றவாறு ரன் எடுக்க சிரமம் இருந்தது. 

40 ரன்னை எடுத்த பேட்ஸ்மேனும் ஒரு ஓவருக்கு 3 ரன் எடுப்பதற்கு சிரமமாக இருந்தது. அப்படிப்பட்ட ஆடுகளத்தில் ஒரு ஓவரில் 5 அல் லது 6 ரன் எப்படி எடுக்க முடியும். 

இதனால் ஆட்டத்தை முன்னதாக முடித்தது சரிதான். தொடரை கைப் பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இஷாந்த் சர்மாவின் பந்து வீச் சு இந்த்த தொடரில் சிறப்பாக இருந்தது. 

பேட்டிங்கில் மூத்த வீரர்களான ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லக்ஷ்ம ண் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்