முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைத்தறி ரகங்களுக்கு 7 நாளில் பணம் பட்டுவாடா

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் 40 நாள் முதல் 60 நாட்கள் வரை காலதாமதம் செய்து பணம் பட்டுவாடா செய்து வந்ததை ரத்து செய்து ஒரு வார காலத்திற்குள் பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் என்று கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 

கோ​ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து இலவச வேட்டி சேலை இரகங்கள்,  பட்டு சேலை, காட்டன் சேலை, திரைச்சீலைகள், துண்டுகள், லுங்கிகள் போன்ற இரகங்களை வருடம் முழுதும் கொள்முதல் செய்து மண்டல சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  மண்டல சேமிப்பு கிடங்குகள் பெற்றுக் கொண்டதுணி இரகங்களைவரவு வைத்த பின் 40 முதல் 60 நாட்களுக்குப் பிறகுதான் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.

கோ​ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர்களுக்குக்  கைகொடுப்பதற்காகவும்  அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.  எனவே கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிடமிருந்து கொள்முதல் செய்த துணி இரகங்களுக்கு 40 நாட்கள் கழிந்தபின் பணப்பட்டுவாடா செய்வது என்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றாகும்.  கோ​ஆப்டெக்ஸ் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட முக்கிய நோக்கங்ளுக்கு மாறாக செயல்படுவதும் மிகவும் வருந்தத் தக்கது.   மேற்கூறிய குறைபாடுகளைக் களைய இந்த அலுவலக குறிப்பாணை உடனடியாக அமுல் செய்ய உத்தரவிடப்படுகிறது.

1.கோ​ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் துணி இரங்களுக்கும் பெடல் தறிமூலம் உற்பத்தி செய்த இரகங்களுக்கும் கொள்முதல் செய்த ஏழு தினங்களுக்குள் அதற்கான முழு தொகையையும் தலைமை அலுவலகம் பட்டுவாடா செய்ய வேண்டும்.  இந்த ஏழு தினங்களுக்குள் விடுமுறை தினங்கள் வந்தாலும் இந்த வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.   இந்த நடைமுறையை மண்டல கிடங்கு மேலாளர்கள், மற்றும் தலைமை அலுவலகத்தில்  பணிபுரியும்  கொள்முதல்  பிரிவு  மற்றும்  பணப்பட்டுவாடா  பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.    வாரம் ஒரு முறை (திங்கட்கிழமை) மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு எந்தெந்த சங்கங்களிலிருந்து எவ்வளவு துணி இரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன, எத்தனை நாட்கள் கழித்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டது போன்ற விபரங்கள் அடங்கிய முன்னேற்ற அறிக்கைகை பொது மேலாளர் (உற்பத்தி) அவர்கள்  வாரம் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.  2.மேற்கூறிய நடைமுறை விசைத்தறி சங்கங்களுக்குப் பொருந்தாது.

3.இதுகாரும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும் கொள்முதல் பட்டியல்களுக்கு  15 தினங்களுக்கு ஒரு முறை பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது,  இந்த நடைமுறையை ஏற்றுக் கொள்ள இயலாது.  எனவே இந்த விதிமுறை உடனடியாக இரத்து செய்யப்படுகிறது.  இனிவருங்காலங்களில்  ஒவ்வொரு நாளும் பட்டியல் பெற்ற அன்றே பட்டியல் தொகை பைசல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவினை பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்