முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் கல்லால் தாக்கி பெயிண்டர் படுகொலை

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை,ஜூலை.13 - கோவையில் நடுரோட்டில் கல்லால் தாக்கப்பட்ட பெயிண்டர் நேற்று காலை இறந்தார். கல்லால் தாக்கிய சம்பவத்தை போக்குவரத்து சிக்னல் கேமிரா பதிவு செய்ததால் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். பெயிண்டர். இவரது மனைவி சரோஜா, மகன் பூவேந்திரன். சந்தோஷ்குமார் கடந்த 11 ம் தேதி மதியம் தனதுநண்பர்கள் கார்த்திக் மற்றும் சரவணன் ஆகியோருடன் சாய்பாபா காலனி ஏ.ஆர்.சி. சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்தியுள்ளார். அருகில் ரத்தினபுரியை சேர்ந்த முருகன், கிருஷ்ணன் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன், சந்தோஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே கிருஷ்ணன் தனது நண்பர்கள் ராமச்சந்திரன், கணேசன் ஆகியோரை சம்பவ இடத்திற்கு வருமாறு தெரிவித்தனர். மது அருந்தி விட்டு வெளியே வந்த சந்தோஷ்குமார் மீது ராமச்சந்திரன், முருகன் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிளை ஏற்றினர். இதில் சந்தோஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் நான்குபேரும் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அருகில் கிடந்த பெரிய கல்லை தலையில் போட்டனர். பின்னர் நான்கு பேரும் தப்பிச் சென்று விட்டனர். இவை அனைத்தும் போக்குவரத்து சிக்னல் கேமிராவில் பதிவாகி இருந்தது. சம்பவம் அறிந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மற்றும் போலீசார் விரைந்து படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கிருஷ்ணன் ராமச்சந்திரன், முருகன், கணேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்குமார் நேற்று காலை 8.30 மணிக்கு இறந்தார். சந்தோஷ்குமார் இறந்த தகவல் கிடைத்ததும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வந்த சந்தோஷ்குமார் மனைவி சரோஜா, மகன் பூவேந்திரன் பிணத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தோஷ்குமாரை கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும். மேலும் அனாதையான எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் வந்த சந்தோஷ்குமார் குடும்பத்தினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சந்தோஷ்குமார் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு அம்மா,அப்பா இல்லை. அதனால் நாங்கள் அனாதையாகி விட்டோம். சந்தோஷ்குமாரை கொன்றவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். மேலும் சந்தோஷ்குமார் குடும்பத்திற்கு அரசு வேலையும் நஷ்டஈடாக ரூ. 5 லட்சம் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இவர்களுடன் உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் முற்றுகையை கைவிடவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இறுதியில் சமாதானம் அடைந்த குடும்பத்தினர் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago