முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்மங்கூல் விற்க ரூ.1000 லஞ்சம்: பில் கலெக்டர் கைது

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.13 - சேலம் புதிய பஸ்நிலைய வளாகத்தில் கம்மங்கூல் விற்பனை செய்ய வாரம் ரூ.1000 லஞ்சம் கேட்ட மாநகராட்சி பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் சகாதேவன்(40). இவர் சேலம் புதிய பஸ்நிலையத்தின் உள்ள ஒரு ஓரத்தில் கம்மங்கூல் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் தள்ளு வண்டியில் கம்மங்கூல் வைத்து விற்பனை செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு ரூ.50 ம், நாள் ஒன்றுக்கு ரூ.200 ம், வாரம் ஒன்றிற்கு ரூ.100 மும் அப்பகுதி மாநகராட்சி பில் கலெக்டர் குமாரசாமிப்பட்டியைச் சேர்ர்ந்த விஜயன் என்பவர் வசூலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சகாதேவனின் மனைவிக்கு கேன்சர் நோய் என்பதால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனால் அவரால் சரிவர கடை நடத்தவில்லை. சம்பவத்தன்று மீண்டும் சகாதேவன் புதிய பஸ்நிலையம் பகுதியில் கம்மங்கூல் கடை நடத்தினார். அப்போது அங்கு வந்த விஜயன் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது மனைவிக்கு உடல் நலன் சரியில்லை பிறகு தருவதாக கூறினார். ஆனால் அதை கேட்க மறுத்த விஜயன் அவரது கடையை அப்புறப்படுத்தினார்.

பணம் கொடுத்தால்தான் கடை வைக்க முடியும் என்றும் மிரட்டி சென்றாராம்.

இது குறித்து சகாதேவன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சந்திரமெளலி ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய நோட்டை சகாதேவனிடம் கொடுத்தனர். நேற்று மதியம் 2 மணியளவில் பில்கலெக்டர் விஜயன் அங்கு வந்தார்.அப்போது சகாதேவன் அவரிடம் ரூ. 1000 த்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி.சந்திரமெளலி,இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், நடராஜ், ரங்கராஜ்,செல்வகுமார் மற்றும் போலீசார் விஜயனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் புதிய பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்