முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஜூலை.14 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முப்பழ பூஜை நடந்தது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த 4 ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினம் இரவு உற்சவர் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். அங்கு கோயில் ஓதுவார்களால் திருப்பொன்னூஞ்சல் பாடப்பட்டு ஊஞ்சலாட்டம் நடந்தது. 

திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான நேற்று முப்பழ பூஜை நடந்தது. அதனை முன்னிட்டு மூலவர் சுவாமிகளுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் படைக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பூஜை, தீபாராதனைகள் முடிந்து சர்வ அலங்காரத்தில் சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளினார். அப்போது பன்னிருதிருமுறை திருப்புகழ் பாடப்பட்டது. சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்