முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை மாற்றத்தால் ராஜஸ்தானுக்கு அடித்தது யோகம்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஜெய்பூர்,ஜூலை.14 - மத்திய அமைச்சரவை மாற்றத்தால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் நேற்றுமுன்தினம் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

பாலைவன மாநிலமான ராஜஸ்தானை சேர்ந்த 5 எம்.பி.க்கள் ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதிலும் இந்த மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சர்மாவும் பி.சி.ஜோஷியும் முக்கிய இலாகாக்களை வகிக்கின்றனர். ஆனந்த சர்மாவிடம் கனரக தொழிற்சாலை துறையும் ஜோஷியிடம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை இருக்கிறது. மேலும் சச்சின் பைலட்( தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு இலாகாவும் நமோ நரையன் மீனாவிடம்(நிதி)மகாதேவ் சிங் கந்தேலாவிடம் மலைஜாதியினருக்கான நலத்துறையும் இருக்கிறது. மேலும் நேற்றுமுன்தினம் மாற்றம் செய்யப்பட்டதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர சிங் உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்