முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் மலைக் கோயிலில் அன்னாபிஷேகம்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி,ஜூலை.14 - பழனி முருகன் மலைக் கோயிலில் உலக நன்மைக்காக 108 வலம்புரி சங்குகள் வைத்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. பழனி முருகன் மலைக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திர தினத்தன்று சித்தனாதன் விபூதி ஸ்டோர் நிறுவனத்தினர் சார்பில் 108 வலம்புரி சங்குகள் வைத்து அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதைத் தொடர்ந்து நேற்று உலக நன்மைக்காக மலைக் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 

முன்னதாக மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்க சப்பரத்தில் வெள்ளிக் குடங்கள், கலசங்கள் மற்றும் 108 வலம்புரி சங்குகள் வைத்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓத ஸ்கந்தயாகம் வேள்வி நடத்தினர். பின்னர் குடங்களிலும், கலசங்களிலும், 108 வலம்புரி சங்குகளிலும் வைக்கப்பட்டிருந்த புனித நீர் மூலவரான முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு 16 வகை அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, துணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் நடராஜன், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், எஸ்.ஜி. தனசேகர், ரவீந்திரன், பழனிவேலு, ராகவன், அசோக், செந்தில்குமார், வள்ளுவர் தியேட்டர் அதிபர்கள் நடராஜன், செந்தில்குமார், கொங்கு வேளாளர் சங்க ஆலோசகர் மாரிமுத்து, பில்டிங் காண்டிராக்டர் நேரு, அரிமா சுப்புராஜ் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony