முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட இலாகா பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் மொய்லி?

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.14 - சட்ட இலாகா பறிக்கப்பட்டதால் அதிருப்தி எனக்கு அதிருப்தி எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரப்ப மொய்லி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தார். நேற்றுமுன்தினம் மத்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்தார். அப்போது வீரப்ப மொய்லிடம் இருந்த சட்ட இலாகாவை பறித்து சல்மான் குர்ஷித்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துறைக்கு பதிலாக வீரப்ப மொய்லிக்கு கம்பெனி விவகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுப்புற சூழல் துறை இணை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷிடம் அந்த இலாகா பறிக்கப்பட்டாலும் அவருக்கு கேபினட் அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அதனால் அவர் கவலைப்படவில்லை. ஆனால் வீரப்ப மொய்லி அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சட்ட இலாகாவை உங்களிடம் பறிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறேதே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த வீரப்ப மொய்லி, எனக்கு எந்தவித அதிருப்தியோ மோதல் போக்கோ இல்லை என்றார். மேலும் எனக்கு எந்த இலாகா கொடுத்தாலும் அதை திரும்பட நடத்தி செல்வேன் என்பது சோனியா காந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் நன்றாக தெரியும் என்றும் கூறினார். அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து பெங்களூரில் பயணம் செய்து கொண்டியிருந்த வீரப்ப மொய்லியை அழைத்து பிரதமர் அவரிடம் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்