முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் மக்கள் நலன்களுக்கு எதிரானது - டாக்டர்கள் சங்கம்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.1- மத்திய பட்ஜெட்டில் பொது சுகாதாரத்துக்கு அதிக நிதி ஒதுக்காமல் இந்த துறையை பலவீனப்படுத்துவது மக்களின் நலன்களுக்கு எதிரானது என டாக்டர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதியை போதுமான அளவிற்கு ஒதுக்காதது வருத்தமளிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதன் முறை ஆட்சியில் இருந்தபொழுது மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 2 முதல் 3 விழுக்காடு வரை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நிதி ஒதுக்கப்படும் என குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதியளித்தது. ஆனால், இதுவரை அவ்வளவு நிதியை ஒதுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 1.2 விழுக்காடுக்கும் மேல் இதுவரை செல்லவில்லை. ராணுவத்திற்காக 1 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள மத்திய அரசு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வெறும் ரூ.26,700 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இது ஏழை மக்களுக்கு இழைத்திடும் மிகப்பெரிய துரோகமாகும். மருத்துவத்துறையில் தனியாரை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும்.

போதிய நிதியை ஒதுக்காமல் பொது சுகாதாரத்துறையை பலவீனப்படுத்துவது மக்களின் நலன்களுக்கு எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருதுகிறது. இந்த போக்கை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்