முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி தெலுங்கானா ஆதரவு காங்., தலைவர்கள் உண்ணாவிரதம்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூலை14 - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி தனி தெலுங்கானா ஆதரவு எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் இரண்டு நாள் உண்ணாவிரத்தை நேற்று ஐதராபாத்தில் தொடங்கினர். தனி தெலுங்கானா போராட்டம் மீண்டும் வலுத்துவிட்டது. தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். அவர்கள் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. இந்தநிலையில் தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைத்து அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அவர்கள் 48 மணி நேர உண்ணாவிரத்தை நேற்று ஐதராபாத்தில் தொடங்கினர். ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 7 எம்.பி.க்கள்,14 எம்.எல்.ஏ.க்கள், 3 அமைச்சர்கள், 2 எம்.எல்.சி.கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தனி தெலுங்கானாவை வலியுறுத்தி நாங்கள் பதவியை ராஜினாமா செய்தோம். அப்படி இருந்தும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மத்திய அரசுக்கு கவனத்தை ஏற்படுத்தவே நாங் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினோம் என்று தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஆந்திர சட்டசபையில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று ஆந்திர காங்கிரஸ் அரசியல் விவகாரத்தை கவனிக்கும் குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர்கள், சட்டசபையில் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகம் இருப்பதால் ஒருமித்த கருத்துடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்