முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன் மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. விசாரணை

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூலை.14 - ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்,. இவர் பத்திரிக்கை, டி.வி. சேனல் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது தந்தையார் முதல்வராக இருந்த போது அதனை பயன்படுத்தி தனது நிறுவனங்களுக்கு முதலீடுகளை குவித்தார் என்றும் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை சேர்த்தார் என்றும் ஜெகன்மோகன் மீது காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் புகார் தெரிவித்தனர். இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நெசவு துறை மந்திரி சங்கர்ராவ் ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். இதனை ரிட் மனுவாக ஏற்று ஐகோர்ட் விசாரணை நடத்தியது. இதையடுத்து நீதிபதிகள் ஜெகன்மோகன் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதை சிரஞ்சீவி வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், ஜனநாயகம் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் கோர்ட் உத்தரவு அமைந்துள்ளது. குறைந்த காலத்தில் ஜெகன்மோகன் ரூ. ஒரு லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். மக்களின் சந்தேகம் தீர வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றார். அனகாவள்ளி எம்.பியும், ஜெகன்மோகன் ஆதரவாளருமான சப்பம் ஹரி கூறுகையில், சி.பி.ஐ. விசாரணை மூலம் ஜெகனுக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரசார் முயன்றுள்ளனர். ஆனால் இதன் மூலம் அவரது செல்வாக்கு மென்மேலும் பெருகுமே தவிர குறையாது என்றார். அவர் கடப்பா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், தெலுங்குதேசம் டெபாசிட் இழந்தது. எனவே மக்கள் ஆதரவு ஜெகன் பக்கம்தான் உள்ளது. சொத்துக்களுக்கு அவர்முறையான கணக்கு வைத்துள்ளார். எனவே சி.பி.ஐ. விசாரணையில் அவர் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago