முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட பயிற்சி முடித்த 43 பேருக்கு சான்றிதழ்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - திரைப்படம் சார்ந்த பயிற்சி முடித்தவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சான்றிதழ்கள் வழங்கினார். 

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இளைஞர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி,  ஜே.சி.பி. இயக்குபவர் பயிற்சி, டீசல் மெக்கானிக்கல், அழகுக்கலை, தையல் கலை, ஆயத்த ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், காலணி மற்றும் தோல் பொருள் தயாரித்தல், திரைப்படம் சார்ந்த பயிற்சி, உணவு தயாரித்தல், சில்லறை விற்பனை மேலாண்மை, உதவி செவிலியர், கணினி பயிற்சிகள் கேட் கேம், டாலி, ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங், மல்டி மீடியா மற்றும் அனிமேஷன் போன்ற பயிற்சிகளும், மேலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளான கேட், பட்டய கணக்கர், செலவு கணக்கர் படிப்பு மற்றும் வங்கி தேர்வு, ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி போன்ற பலவித பயிற்சிகள் ஆண்டுக்கு சுமார்22,000 நபர்கள் பயன் பெறும் வகையில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சிகளுக்காக மாநில அரசு ரூ.25 கோடி நிதி வழங்குகிறது. 

இப்பயிற்சியின் ஒரு பிரிவான திரைப்படம் சார்ந்த நீண்ட பயிற்சிகள் இந்திய அரசு நிறுவனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. 

அசுடுக்ஷ​ ஈடுகிடுசிஹங் சச்டூ ங்டுடூடீஹஙு உக்ஷடுசிடுடூகி, ஊஇட​ சச்டூ கடுடூடீஹஙு உக்ஷடுசிடுடூகி, இடுடூடீஙிஹசிச்கிஙுஹஙீகீநீ டுடூ யடுக்ஷடீச் இஹஙிடீஙுஹ, ஙசீங்சிடுஙிடீக்ஷடுஹ, அசீக்ஷடுச் உடூகிடுடூடீடீஙுடுடூகி, ஈடுகிடுசிஹங் நசிடுங்ங் டகீச்சிச்கிஙுஹஙீகீநீ, யடுக்ஷடீச் நசீஸசிடுசிடுடூகி.

திரைப்படம் சார்ந்த இப்பயிற்சிகள் மொத்தம் 220 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவஇளைஞர்களுக்கு ரூ.17 லட்சம் செலவில் வழங்கப்பட உள்ளது. முதல் தொகுதியில் இப்பயிற்சி முடித்துள்ள 43 நபர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 13.7.2011 அன்று மாலை 4 மணிக்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக வளாகத்தில் நடைபெற்றது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பயிற்சி முடித்துள்ளவவ்களிடம் பயிற்சியின் பயன்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். பயிற்சி நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பயிற்சிக்கான தளவாடங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார். பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடி வேலை கிடைத்திட உதவி செய்யப்படும் என்று தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக நிர்வாகிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஆ.சு.ஜீவரத்தினம், தாட்கோ மேலாண்மை இயக்குநர் சா.விஜயராஜ்குமார் மற்றும் பயிற்சி  நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago