முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக்சேனா மீது புகார் கொடுத்த விநியோகஸ்தர் வீட்டில் ரெய்டு

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சேலம் ஜூலை.14 - தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் விநியோக உரிமைக்காக கொடுத்த பணத்தில் ரூ.73 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டி வருவதாக சன் டி.வி.தலைமை நிர்வாக சக்சேனா மீது புகார் கொடுத்த விநியோகஸ்தர் சேலம் கந்தன் பிலிம்ஸ் செல்வராஜ் வீட்டில் நேற்று மாலை திடீரென வருவான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் சினிமாத்துறை தி.மு.க.தலைவர் கருணாநிதியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து.பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வைத்து மிரட்டி குறைந்த விலைக்கு படங்களை வாங்கி விநியோகதஸ்ர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடிவடி செய்து வந்தனர்.

 அவுட் ரேட் முறையில் அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் படம் அதிகம் ஒடாததால் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விநியோக முறையில் படம் வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு பாக்கி பணம் வரவேண்டியது இருந்து கேட்டால் பணம் தரமால் இழுத்தடிக்கப்பட்டனர். சிலர் மிரட்டப்பட்டனர். இதே போல் சேலம் பிருந்தாவன் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர் சேலம் சினிமா நகரில் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் விநியோக நிறுவனம் வைத்து பட விநியோகத்தில் பல ஆண்டுகாலமாக ஈடுபட்டார். இவர் சன் பிக்சர்ஸ் விற்பனை செய்த விசால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் சேலம் விநியோக உரிமையை ரூ.1.25 கோடிக்கு பெற்றார். அந்த படம் சரியாக போகாததால் அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.73 லட்சம் பாக்கி வர வேண்டியது. இருந்தது. அந்த பணத்தை தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரை இழுத்தடித்து. ஒரு கட்டத்தை பணம் தர முடியாது என்று தலைமை நிர்வாகி சக்சேனாவால் அவர் மிரட்டபட்டாரம். ஆட்சி அதிகாரம் தி.மு.க.வின் கையில் இருந்ததால் இவர்களை பற்றிய புகார்களை போலீசார் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு சில இடங்களில் புகார் கொடுத்தவர்கள் மீதே போலீசார் பாய்ந்தனர்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வரானதும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே தனது முதல் பணி என அறிவித்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் போலீஸ் கமிஷனரை சேலம் விநியோகஸ்தர் செல்வராஜ் தனக்கு சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் விநியோக உரிமை தொடர்பாக தர வேண்டிய ரூ.73 லட்சத்தை தர மறுப்பதாகவும் அதை பெற்று தருமாறும் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சக்சேனாவை கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து சன் டி.வி.தலைமை நிர்வாகி சக்சேனா மீது திரைப்படத்துறையைச் சேர்ந்த பலர் புகார் கொடுத்தனர். கொடுத்தும் வருகின்றனர். சக்சேனாவிற்கு அடியாளக செயல்பட்ட மீடியேட்டர் ஐயப்பனையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவரது மற்ற கூட்டாளிகள் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் போலீசார் சன் டி.வி.யின் உரிமையாளர் கலாநிதி மாறனையும் இந்த புகாரில் விசாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை சக்சேனா மீது முதல் புகார் கொடுத்த சேலம் விநியோகஸ்தர் செல்வராஜ் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு செய்தனர். கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சேலம் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள சினிமா நகரில் உள்ள அவரது அலுவலகம்,பிருந்தாவனம் ரோட்டில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம்

 சக்சேனா மீது புகார் கொடுத்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்சேனா தவறு செய்ததில் உண்மை இருப்பதால்தான் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் புகார் கொடுத்தவர்களை பழி வாங்க மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.

நிதித்துறையின் மத்திய இணையமைச்சராக உள்ள பழனி மாணிக்கம் த்தின் துறையின் கீழ் வரும் வருமான வரித்துறையினரை ஏவி பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவே சக்சேனாமீது புகார் கொடுத்தவர்கள் கருதுகின்றனர்.

மாநிலத்தை ஆண்டபோது இவர்கள் சட்டத்தை மீறி செய்த தவறுகளுக்குதான் மக்கள் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் பதவிகளை வைத்துக் கொண்டு தங்கள் மீது புகார் கொடுப்பவர்களை பழி வாங்கும் நிலையை தி.மு.க.தொடர்தால் அனைத்தையும் உற்று நோக்கும் மக்கள் உள்ளாட்சி தேர்தல் உள்பட வரும் அனைத்து தேர்தல்களிலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குமறுகின்றனர்.சன் டி.வி.நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட திரைப்படத்துறையினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்