முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா கால் பந்து: கால்லிறுதியில் உருகுவே

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 14 - அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்க கால் பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில் உருகுவே மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இது பற்றிய விபரம் வருமாறு - 

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்க கோப்பை கால் பந்து போட்டி அர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது கால் இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. 

12 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டினா, கொலம்பி யா ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தின் முடிவில் சிலி, உருகுவே அணிகள் கால் இறுதியில் நுழைந்தன. 

சி பிரிவில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் உருகுவே 1 - 0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. இதே பிரிவில், நடந்த மற்றொரு ஆட்டத்தில், சிலி 1 - 0 என்ற கோல் கணக்கில் பெரு நாட்டை தோற்கடித்தது. 

சி பிரிவில் சிலி 7 புள்ளிகளுடன் (2 வெற்றி, 1 டிரா) முதலிடத்தையும், உருகுவே 5 புள்ளிகளுடன் (1 வெற்றி, 2 டிரா) 2 -வது இடத்தையும் பிடித்து கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

உருகுவே அணி கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணியுடன் மோத இருக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 16 -ம் தேதி நடைபெற இரு க்கிறது. இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. 

பி பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் பிரேசில் அணி ஈக்குவடார் அணியுடன் மோதியது. மற்றொரு ஆட்டத்தில் பராகுவே அணி வெனிசுலா அணியுடன் மோதியது. 

இந்தப் பிரிவில் வெனிசுலா 4 புள்ளியுடனும் (ஒரு வெற்றி, ஒரு டிரா), பராகுவே மற்றும் பிரேசில் அணிகள் தலா 2 புள்ளிகளுடனும் (2டிரா) ஈகுவடார் ஒரு புள்ளியுடனும் (1 டிரா, 1 தோல்வி) உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்