முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் கோபால் - சக்சேனா மீது ஆசிரம மேனேஜர் புகார்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - சன் டி.வி., மற்றும் நக்கீரன் இதழ் ஆகியவற்றில் நித்தியானந்தா சாமியார் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க ஒளிபரப்பாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டு தன்னை தாக்கி மிரட்டி ரூ.15 லட்சம் வரை பறித்துச் சென்றதாகவும் சன்நெட்வொர்க் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் மீது நித்யானந்தரின் பெங்களூர் ஆசிரம மேனேஜர் புகார் அளித்துள்ளார்.

நேற்று அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதர் என்பவர் எங்களை அணுகினார். வர் தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.

21.2.10 தேதியன்று நான் ஸ்ரீ நித்ய ப்ராணான்ந்தாவுடன் இருந்தபோது மேலே கூறப்பட்ட ஸ்ரீதர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு தான் சென்னையில் பணிபுரியும் ஒரு வக்கீல் என்று கூறினார். அவர் தன்னிடம் ஒரு வீடியோ காட்சிகள் இருப்பதாகவும், அவைகளில் ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமியைப் போல் காட்சியளிக்கும் ஒருவர்  நடிகை ரஞ்ஜிதாவைப்போல் காட்சியளிக்கும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக கூறினார். அவற்றை கெ.லெனின் என்பவர் தன்னிடம் அளித்ததாக கூறினார். மேலும் இந்த வீடியோ வெளியிடப்படவில்லை என்றும், இந்த வீடியோவை உருவாக்கிய கே.லெனின் மற்றும் ஆர்தி ராவ் ஆகியோரிடம் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் அதனை வைத்து அவர்களிடம் நற்பிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார்.

22.2.10 தேதியன்று ஸ்ரீ நித்ய ப்ராணானந்த், ஸ்ரீ நித்ய பக்தானந்த, எங்கள் அமைப்பின் செயலாளர் ஸ்ரீ நித்ய ஸதானந்த ஆகியோர் பெங்களூர் பிடதியிலிருந்து சென்னைக்கு சென்றனர். ஸ்ரீதர் என்பவர் கூறியபடி தி.நகரிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.

23.2.10 தேதியிலிருந்து 26.2.10 தேதிவரை உடன்படிக்கை ஏற்படுத்தவதற்காக ஸ்ரீதரை பலமுறை சென்று சந்தித்தார்கள். முதலில் ஸ்ரீதரால் கோரப்பட்டவை ரூபாய் அறுபது லட்சம் ரொக்கம், எங்கள் ஆசிரமத்தை சார்ந்த சிவவல்லபனேனி என்பவரின் சொத்து ஹைதராபாதிலும், மற்றும் எங்கள் ஆசிரமத்தை சார்ந்த சாயிராம் முத்துசாமி என்பவரின் சொத்து சென்னையிலும், இந்த கோரிக்கைகள் மிக அபரிமிதமானதாகவும் அபத்தமாகவும் இருந்தன. எங்கள் அமைப்பு ஒரு தொண்டு நிறுவனம் என்பதால் எங்களிடம் கொடுப்பதற்கு அவ்வளவு பெரிய தொகை இல்லை.

இந்த வீடியோவை உருவாக்கிய கே.லெனின் மற்றும் ஆர்தி ராவ் இந்த பேரத்திற்கு ஒப்புதல் அளித்ததாக ஸ்ரீதர் கூறினார். எங்களுடைய உண்மைத்தன்மையை உணர்த்துவதற்காக முன் பணமாக பெரிய தொகையை அளிக்குமாறு வற்புறுத்தினார். நாங்கள் எந்த பண பரிவர்த்தன்னையும் நடத்துவதற்கு முன்னர் அந்த வீடியோ காட்சியின் மூலசில்லுகளையும் அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட நகல்கள் அனைத்தையும் கொடுக்குமாறு கோரினோம். மேலும் எங்களிடம் ஸ்ரீதர் கோரிய அளவு பணம் இல்லாததால்  முதலில் எங்களுடைய பக்தர்களின் பெயரில் ஹைதாராபாதிலுள்ள ஒரு சொத்தும் சென்னையிலுள்ள ஒரு சொத்தும் ஸ்ரீதர் கூறிய நபரின் பெயரில் மாற்றுவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்டதாக உடன்படிக்கை ஏற்பட்டது.

அந்த சொத்துக்களை மாற்றுவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டதால் எரிச்சலடைந்த ஸ்ரீதர் ரூபாய்  அறுபது லட்சத்தை உடனடியாக முன்பணமாக தராவிட்டால் லெனினிடம் சொல்லி அந்த வீடியோவையும் புகைப்படங்களையும் வெளியிடச்சொல்லப் போவதாக கூறினார். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் சிறிது கால அவகாசம் கேட்டோம். உடனே ஸ்ரீதர் கே.லெனனிடம் போன் செய்து ஒலிப்பெருக்கியை இயக்கினார். லெனின் முதலில் ஆர்த்தி ராவிடம் தொடர்பை கொடுத்தார். அவர் நீங்கள் முழு பணத்தை கொடுக்காவிட்டால்  ஸ்வாமி என்னை கற்பழித்தார் என்று புகார் கொடுத்து உங்கள் அனைவரையும் சிறைக்குள் அனுப்புவேன் என்று மிரட்டினார். பின்னர் லெனின் காமராஜ் மற்றும் கோபால் எனும் நக்கீரன் கோபாலிடம் தொடர்பை கொடுத்தார். அவர்களும் அந்த பணத்தை அளிக்காவிட்டால் சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோவையும் மற்றும் புகைப்படங்களையும் நக்கீரன் பத்திரிகையிலும் நக்கீரன் இணைதயளத்திலும் வெளியிடப்போவதாக மிரட்டனர்.

இரண்டு மணிநேரம் கழித்து ஸ்ரீதர், லெனின், குமார் மற்றும் நான்கு தெரியாத நபர்களுடன் எங்களின் விடுதிக்கு வந்து அறையில் இருந்த எங்கள் மக்களான ஸ்ரீ நித்ய ப்ராணான்ந்த, ஸ்ரீ நித்ய ஸ்தான்ந்த் மற்றும் ஸ்ரீ நித்ய பக்தான்ந்த் ஆகியோரை அடித்து அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பையில் வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை பறித்துச் சென்றனர். லெனின் நீங்கள் மீதி பணத்தை கொடுக்காவிட்டால் அந்த வீடியோவையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ஸ்வாமியின் பெயரைக் கெடுத்து விடுவோம், உங்கள் மீதும் ஏதாவது பொய் வழக்குப்போடுவோம் என்று மிரட்டனார். தனக்கு, மேல் நிலையிலுள்ள அரசியல்வாதிகளுடன்  தொடர்பு உள்ளதாக கூறினார்.

நாங்கள் முழுமையாக பயந்துபோய் பல பக்தர்களை தொடர்பு கொண்டு 20 ஆயிரத்து 5 லட்சத்தை சேகரித்து ஸ்ரீதரிடம் கொடுத்தோம். பின்னர் அவர் நக்கீரன் பதிப்பகம், ஸ்ரீ நித்யானந்தஸ்வாமி மற்றும் ரஞ்ஜிதாவை காட்டும் அந்த சித்தரிக்கப்பட்ட வீடியோவையும், உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடாது என்று உறுதியளித்தார்.

எங்கள் மக்கள் அனைவரும் பிடதியிலுள்ள ஆசிரமத்திற்கு திரும்பி சென்றுவிட்டோம். 2.3.10 தேதியன்று சன் டிவி தன்னுடைய செய்தி ஒளிப்பரப்பில் 25 நிமிடத்திற்கு அந்த சித்தரிக்கப்பட்ட வீடியோவை ஆபாசமான விரிவாக்கத்துடன் வெளியிட்டது. சன் டிவியை தங்கள் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உலகளாவிய மக்கள் அந்த விவரணை பாலியல் படத்தில் வருவதுபோல் ஆபாசமாக இருந்ததால் டிவியை அணைப்பது, அல்லது சேனலை மாற்றுவது போன்ற கட்டாயத்திற்குள்ளானார்கள். அந்த கோரமான தரக்குறைவாக்கும் வெளியிடுதலால் எங்கள் முழு அமைப்பின் நன்மதிப்பும் குப்பையாக வீசியெறியப்பட்டது. எங்களுடைய அமைப்பின் நன்மதிப்பை குலைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கர்னாடகாலும் பல்வேலு இடத்தில் இருந்த நித்யானந்த் த்யானபீட ஆசிரமத்தை நேரடியாக வந்து நாசம் செய்ய முயற்சித்தனர். பிடதியிலுள்ள ஆசிரமம் சன் டிவியுடன் சம்பந்தம் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் சில அயோக்கிய சக்திகளால் சூறையாடப்பட்டது. (அவர்கள் அந்த தொகுதியை சார்ந்த அயோக்கியர்கள்என்று கர்னாடக போலீசாரால் அடையாளம் காட்ட முடியாத காரணத்தால்). ஆசிரமத்திலுள்ள குடிசை தீயிடப்பட்டது. அதில் இருந்த ஸ்ரீ நித்ய ப்ரஹ்மஸ்வரூபானந்த, ஸ்ரீ நித்ய யோகாத்மானந்த், மற்றும் ஸ்ரீ நித்ய ஸனாதனான்ந்த ஆகிய மூன்று ப்ரஹ்மச்சாரிகள் அந்த பகைமையுணர்வோடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஏறக்குறைய உயிரோடு கொளுத்தப்பட்டனர். தமிழகத்திலிருந்து பிடதிக்கு அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அயோக்கிய சக்திகளால் விட்டுச்செல்லப்பட்ட பெட்ரோல் குண்டுகள், மண்ணெண்ணை, மற்றும் ஆஸிட் (அமிலம்) பாட்டில்களை பார்த்து அதிர்ந்துவிட்டோம்.

இந்த ஒளிப்பரப்பு நடந்தவுடனே ஸ்ரீதருடன் தொடர்பு கொண்டு இந்த ஒளிபரப்பைப்பற்றி கேட்டேன். அவர் இதைத்தீர்ப்பதற்காக என்னை சென்னைக்கு வரச்சொன்னார். உடனே நான் சென்னைக்கு விரைந்து சென்று ஸ்ரீதரை சந்தித்தேன். எங்களுடைய அமைப்பிலிருந்து பெரும் தொகையை பறிப்பதற்காகவும், சமுதாயத்தில் எங்கள் குழு ஸ்ரீ நித்யானந்த் ஸ்வாமியின் மற்றும் எங்களுடைய அமைப்பின் பெயர், புகழ் மற்றும் நன்மதிப்பை சீர்குலைக்கவும் மிகத்தெளிவாக லெனின், குமார், ஆர்த்தி ராவ், காமராஜ், ராஜகோபால் எனும் நக்கீரன் கோபால், சன் டிவி நெட்வொர்க்கின் தலைமை இயக்குனர் சக்சேனா மற்றும் அவருடன் நெருக்கமான ஐயப்பன் ஆகியோரால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று கூறினார். அந்த வீடியோவை சன் டிவியிலும், புகைப்படங்களை தினகரன் பத்திரிகை மற்றும் அவருடைய இணையதளத்திலும் வெளியிட்டிருந்தனர்.

மேலே கூறப்பட்ட ஐயப்பனை என் முன்னிலையில் ஸ்ரீதர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சித்தரிக்கப்பட் வீடியோவும், புகைப்படங்களும், செய்திகளும் இனியும் ஒளிப்பரப்புவதையும், பிரசுரிக்கப்படுவதையும் தடுக்க எங்கள் அமைப்பு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளதாக கூறினார். பின்னர் ஐயப்பன் என்னை அழைத்து மேலும் உடன்படிக்கைக்காக தன்னுடைய  அலுவலகத்திற்கு அழைத்தார். சன் டி.வியில் இந்த ஒளிப்பரப்பை நிறுத்துவதற்கும், நக்கீரனின் பிரசுரிக்கப்படுவதை நிறுத்துவதற்கும் ஐயப்பன் ரூபாய் அறுபது கோடியை கோரினார். அவ்வளவு பணத்தை எங்களால் கப்பமாக கொடுக்க முடியாத காரணத்தால் என்னை அவருடைய   அலுவலகத்திலேயே அன்று இரவு பிணையாக வைத்திருந்து 3.3.10 அன்று இழிவுப்படுத்தி மிரட்டினார். மறுநாள் ஐயப்பனின் பிணைப்பிலிருந்து தப்பிப்பதற்காக என்னை அந்த அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல அனுமதித்ததால் எங்கள் ஆசிரமத்தின் பக்தர்களிடமிருந்து சேகரித்து கப்பப்பணத்தின் ஒரு பகுதியையாவது செலுத்த ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினேன். என் வார்த்தையை நம்பி ஐயப்பன் 4.3.10 அன்று என்னை தன்னுடைய அலுவலகத்திலிருந்து செல்ல  அனுமதித்தார். அப்பொழுது இந்த கப்ப பணத்தை செலுத்தாவிட்டால் என்னை தேடி கண்டுபிடித்து கொன்றுவிடுவேன் என்று கூறினார்.

4.3.11 -ம் தேதி வக்கீல்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் அடங்கிய ஒரு குழுவினரால்  எங்களுடைய ஆன்மீக குரு ஸ்ரீ நித்யான்ந்த ஸ்வாமிகளின் மீது அறிந்து கொண்டேன். இந்த அவமானச் செயலை நடத்தி சதி திட்டம் தீட்டிய குற்றவாளிகள் அனைவர் மீதும் குற்ற நடவடிக்கை எடுப்பதறாக நான் ஏற்பாடு செய்தேன். ஆனால் அதற்கு பதிலாக ஊடகங்களை சந்தித்து விவரிக்குமாறு ஆலோசனை அளிக்கப்பட்டேன். ஆகவே 4.3.10 அன்று ஊடகங்களை சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் சந்தித்து இந்த சதி திட்டத்தை பற்றியும் கப்ப பணம் கேட்டு மிரட்டியதை பற்றியும் எடுத்து கூறினேன். ஆனால் பொதுமக்களுடைய கருத்துக்களும் ஊடகங்களுடைய கருத்துக்களும் எங்களுடைய மொத்த அமைப்பிற்கு எதிராகவும் ஸ்ரீ நித்யானந்த் ஸ்வாமிக்கு எதிராகவும் இருந்ததால் என்னால் உரைக்கப்பட்ட உண்மை வெளிவரவில்லை.

5.3.10-ம் தேதி நான் பிடதி செல்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்த சமயத்தில் ஐயப்பன் பல குண்டர்களுடன் வந்து சென்னை வழிமறித்து இழிவான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து அடித்தனர். ஒரு நேரத்தில் அவர்களுடைய மூர்க்கத்தனமான தாக்குதலால் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு மயங்கிவிட்டேன். என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச்சென்று பாண்டிபஜார் காவல் நிலையம் அருகில் ஒரு இடத்தில் காரை நிறுத்தினர். அங்கு ஐயப்பனால் மிரட்டப்பட்டேன். பின்னர் அவர் தொலைபேசியில்  ஒருவரிடம் தொடர்பு கொண்டு அந்த தொலைபேசியை என்னிடம் கொடுத்தார். மறு பக்கத்தில் பேசியவர் தன்னை சன் சேனகளில் தலைமை அதிகாரி ச்க்சேனா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரும் என்னை மிரட்டி அந்த கப்பப்பணத்தை இனியும் தாமதிக்காமல் ஐயப்பனிடம் செலுத்துமாறு கூறினார். இல்லையேல் என்னை போதைப்பொருள் கடத்தியதாக கூறி சிறையிலிடுவதாக கூறினார்.

வேறு வழி இல்லலாததால் சென்னையிலும் பெங்களூரிலுள்ள எங்களுடைய மிக நெருங்கிய பக்தர்களிடம் தொடர்பு கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரிக்க கோரினேன். அவர்களால் அதிகபட்சமாக ரூபாய் பத்து லட்சம்  ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பணத்தை அவர்கள் பாண்டிபஜாருக்கு எடுத்து வருமாறு கூறப்பட்டு அவர்களிடமிருந்து ஐயப்பனால் பறிக்கப்பட்டது. பிறகு கப்பப்பணத்தின் மீதியை கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு கூறி என்னை விடுவித்தார்.

தலையில் ரத்தக்காயத்துடன் மனத்தில் பீதியுடன் நான் பிடதிக்கு சென்று நடந்த அனைத்து உண்மைகளையும் ஆசிரமத்திலுள்ள எனது மேலதிகாரிகளிடம் கூறினேன். மார்ச் 24-ம் தேதியன்று எங்கள் ஆசிரமத்தை சார்ந்த ஸ்ரீ நித்ய ஹம்ஸானந்த் என்பவர் என்னிடம் வந்து கடந்த ஜனவரி 3-ம் தேதியன்று லெனினுக்கு மிக நெருக்கமான காஞ்சிபுரத்தை சார்ந்த ப்ரஸன்னா என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். அவர் லெனினுக்கு அரசியல் பலமாக இருப்பவர் இந்தியாவில் மிக பெரிய அரசியல்வாதியென்றும் அவருடைய அனுமதி இல்லாமல் யாரும் எதையும் செய்யமுடியாது என்றும் கூறினார். அடுத்த பேசியபொழுது ஸ்வாமியின் ஜாமீனை ரத்து செய்து அவரை மறுபடியும் கைது செய்ய வேண்டி இந்த அரசியல்வாதி கர்னாடாக முதன்மந்திரியிடமும் உள்துறை அமைச்சரிடமும் கையெழுத்து பெற உதவினார் என்றும் ப்ரஹன்னா கூறினார். ப்ரஸன்னா மறுமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லெனினுக்கு அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையினரின் ஆதரவு கணிசமாக இருப்பதாக கூறி ரூபாய் முப்பத்தைந்து கோடி கொடுத்தால் ஸ்வாமிஜியின் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் விட்டுவிடுதாக கூறினார். அதில் ரூபாய் இருப்பத்தைந்து கோடி லெனின் மற்றும் தனக்குமாகவும், ரூபாய் பத்து கோடி பிறருக்கு என்று கூறினார். இந்த தொகை கொடுக்கப்பட்டாவுடன் ஸ்வாமியின் மீது உள்ள அனைத்து வழக்குகளும் மூடப்பட்டு அவை அனைத்தும் ஒரு மூலையில் போடப்பட்டு எறிக்கப்படும் என்றார்.

எனது உயிருக்கு பயந்து, மற்றும் இந்த அவமானத்தை ஏற்படுத்திய நபர்களின் அரசியல் பலம், ஆள் பலத்தினை கருத்தில் கொண்டு இந்த புகாரினை இதுநாள் வரை கொடுக்க முடியாதவாறு தடுக்கப்பட்டேன்.

ஆகையால், மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு, காவல்துறை ஆணையர் சட்டப்படி இந்த நிகழ்விற்கு காரணமான ஸ்ரீதர், லெனின், குமார், ஆர்த்தி ராவ், காமராஜ், ராஜகோபால் எனும் நக்கரீன் கோபால், சக்சேனா, ஐயப்பன் மற்றும் ஏனையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்