முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பு: சென்னையில் தீவிர சோதனை

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 - மும்பையில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பை ஒட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  நேற்று இரவு போலீசார் விடிய விடிய பாதுகாப்பு சோதனை நடத்தினர். விமான ,ரயில் நிலையங்களில் உள்ளிட்ட முக்கிய இடங்கிளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:

நேற்று முன்தினம் மும்பையில் உள்ள ஜாவேரி பஜார், தாதர்,  ஒபரா ஆகிய 3 இடங்களில் குண்டு வெடித்து 20 க்கு மேற்பட்டோர் பலியானார்கள். 25 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர் , மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  இந்த குண்டு வெடிப்பை ஒட்டி இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் மிரட்டல் உள்ளது என்று உள்துறை எச்சரித்துள்ளது.  குண்டு வெடிப்பை ஒட்டி சென்னை நகரம் முழுவதும் நேற்று பாதுகாப்பை அதிகரிக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.   அதன்பேரில் சென்னை முழுவதும் உள்ள சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து விடிய , விடிய போலீசார் சோதனை நடத்தினார்கள்.  சென்னைக்குள் நுழையும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டது. வாகனசோதனை தவிர சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் , எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ்நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பலத்த காவல் போடப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் 35 ரகசிய  கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.   பாம்ஸ்குவாடு குழுக்கள் மூலம் ரயில் பெட்டிகள், பயணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. இதேபோல் விமான நிலையத்திலும் பயணிகளின் உடமைகள்  சோதனையிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago