முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஜூலை.15 - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் மத்திய அரசு அறிவிக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி போராட்டம் மீண்டும் வலுத்துள்ளது. ஆந்திராவில் உள்ள தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் விஜயவாடாவில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா போராட்ட கூட்டுக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி நேற்று தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் முழுமையாக நடந்தது. இந்த போராட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பாரதிய ஜனதா, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன. ரயில் மறியலில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா பகுதியில் பல்வேறு இடங்களில் இந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டதாக தெரிகிறது. தனி தெலுங்கானா மாநிலம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கட்கேசர் ரயில்நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தெலுங்கானா போராட்டக்குழு அமைப்பாளர் கோடன்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். செகந்திராபாத் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட பாரதியஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் இதர கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்வதன் மூலம் தெலுங்கானா போராட்டத்தை ஒடுக்க முடியாது. தனி தெலுங்கானா மாநிலத்தை அமைத்து மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்று தத்தாத்ரேயா பேட்டி அளிக்கையில் கூறினார். ஆந்திராவின் கடற்கரை மாவட்டமான வாராங்கலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி எம்.எல்.ஏ. வினாய் பாஸ்கர் தலைமையில் ரயில் மறியல் நடைபெற்றது. காக்கிநாடா-ஐதராபாத் கெளதம் எக்ஸ்பிரஸ் ரயிலை இவர்கள் மறித்தனர். அதனால் போக்குவரத்து பாதித்தது. இந்த ரயிலில் வந்த மாநில அமைச்சர் தோடா நரசிம்மன் கோபம் அடைந்தார். அவர்  பின்னர் சாலை வழியாக ஐதராபாத்திற்கு சென்றார். மேலும் அவர் சென்ற வாகனம் மீது போராட்டக்கார்கள் தாக்குதல் நடத்தியதால் அதுவும் சேதம் அடைந்தது. ரயில் மறியல் போராட்டம் காரணமாக பல ரயில்களை நிறுத்தப்பட்டது. வேறுசில ரயில்கள் வேறு வழித்தடங்களில் அனுப்பப்பட்டிருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்