முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் குண்டுவெடிப்பு: பாரதிய ஜனதா கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.15  -  மும்பையில் நேற்றுமுன்தினம் 3 இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நடத்தியுள்ளதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் குண்டுவெடிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றும் பாரதிய ஜனதா எச்சரித்துள்ளது. 

தீவிரவாதிகளும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் மும்பையை குறித்துவைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி வருகின்றன என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மும்பையை குறிவைத்து தாக்கும் அந்த தீய சக்திகள் மீது இந்தியா சரியான நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கு எங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாரதிய ஜனதா தயாராக இருப்பதாகவும் ஜவதேகர் தெரிவித்தார். மும்பை தொடர்பாக பாரதிய ஜனதா ஒரு தெளிவான, விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago