முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூந்தமல்லி பார்வையற்றோர் மையத்தில் அமைச்சர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 - சென்னை ந்தமல்லியில் அமைந்துள்ள தேசிய பார்வையற்றோர் மண்டல மையத்தினை சமூக நலம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சர் செல்வி இராமஜெயம் பார்வையிட்டார்கள்.  அப்போது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் கண்ணகி பாக்கியநாதன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ப.ரா. சம்பத், தேசிய பார்வையற்றோர் மண்டல மையத்தின் இயக்குநர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.   தமிழக முதலமைச்சர், 1, 2 பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல, 1, 2 பயிலும் மாற்றுத் திறன்படைத்த மாணவர்களுக்கும்,  மடி கணினி வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்கள். 

அதனடிப்படையில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் மடி கணினியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும், மற்றும் பார்வைற்ற மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் மடி கணினிக்குத் தேவையான மென்பொருள்களையும் எவ்வாறு அவர்களுக்கு வழங்குவது குறித்தும் மேற்கண்ட மையத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.  nullந்தமல்லியில் அமைந்துள்ள தேசிய பார்வையற்றோர் மண்டல மையத்தில் தமிழக அரசின் சார்பாக பார்வையற்ற மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  

இந்த பயிற்சியானது 6 மாதங்கள் ஆகும்.   அதற்கான தொகையினை தமிழக அரசு  மேற்கண்ட மையத்திற்கு வழங்கி வருகிறது.    இந்த பயிற்சியினைப் பெறும் மாணவர்கள் கணினியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்கள்.   இந்த மண்டலத்தில் பார்வையற்றோர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சியானது அவர்களுடைய வேலை வாய்ப்பிற்கு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்