முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. பிரமுகர்களால் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.15 - கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கும்பாபிஷேகம் நடைபெறவிடாமல் தடுத்து மிரட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க. பிரமுகர்களிடமிருந்து கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை கோயம்பேட்டை அடுத்த சின்மியா நகரில் உள்ள குலசேகர புரத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். குலசேகரபுரம் குடியிருப்போர் நலசங்கத்தை சார்ந்தவர் கள் என்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.  தங்கள் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் சக்கரை, வீரப்பன், சுந்தரேசன். ராஜேந்திரன், பிச்சைக்குட்டி, மணி, நவநீதகிருஷ்ணன், செல்வம்,வடிவேலு, மூர்த்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நீரோடை முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும்  கேட்கபோனால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்தனர். மேலும் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது இதனால் தடைபடுகின்றது என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் 10 தி.மு.க பிரமுகர்களிடமிருந்த கோயில் நிலத்தை மீட்டு தர கோரிக்கை யையும் புகாரில் தெரிவித்தனர்.  புகார் தெரிவிக்க வந்தவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்பு கமிஷனர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள கென்னட் லேன் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருவல்லிக்கேணி துணை ஆணையர் புகழேந்தி தலைமையில் போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் குடியிருப்போர் சங்க தலைவர் லோகு தலைமையில் 5 பேரை புகார் தெரிவிக்க கமிஷனரிடம் அழைத்து சென்றனர் .பொதுமக்கள் கமிஷனரிடம் புகார் மனுவை கொடுத்தனர்.   இதனால் கமஷனர் அலுவலகம் பரபரப்பானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்