முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவுக்குள் பிரதமர்: ராகுல் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புவனேஸ்வரம்,ஜூலை.15 - லோக்பால் மசோதாவின் அதிகாரத்தின் கீழ் பிரதமரையும் கொண்டுவர ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட உள்ளது. இந்த மசோதாவின் அதிகாரத்தின் கீழ் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி நேற்று ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் பதவியில் இருக்கும் வரை அவரை லோக்பால் மசோதா அதிகாரத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது. அதேசமயத்தில் அவர் பதவியில் இருந்து விலகிவிட்டால் அவரை லோக்பால் மசோதா அதிகாரத்தின் கீழ் கொண்டு வரலாம் என்றார். பிரதமராக இருப்பவர் நாட்டுக்கு வழிகாட்டியாக இருப்பதோடு பல்வேறு பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்திக்கொண்டியிருப்பார். அப்படியிருக்கையில் அவரை லோக்பால் மசோதா அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவது ஆரோக்கியமானதாக இருக்காது. லோக்பால் மசோதா ஒரு நல்ல வளர்ச்சிதான். லோக்பால் மசோதாவானது ஊழல் நடந்த பிறகுதான் அதை தடுக்கிறது. ஊழல் நடப்பதற்கு முன்பே அதை நாம் ஒழிக்க வேண்டும். நிர்வாகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயத்தில் ஊழலை ஒழிக்க இளம் அரசியல்வாதிகள் பெரும் உதவி செய்ய முடியும் என்றும் ராகுல் காந்தி கூறினார். ஊழலை ஒழிக்க பிரதமர் மன்மோகன் சிங்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஊழலில் சம்பந்தப்பட்ட முதல்வர்களை நாங்கள் பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். ஊழலில் ஈடுபட்ட சில அமைச்சர்களை சிறையில் தள்ளியுள்ளோம். ஆனால் கர்நாடகம், உத்திரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஊழல் அதிக அளவு நடக்கிறது. இதை தடுக்க எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago