முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று முதல் தர்ணா

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 - ஜூன் 19-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டத்தின் முடிவின்படி ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம்., சி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இன்று முதல் 7 நாட்கள் வரை அனைத்து முக்கிய நகரங்களில் தர்ணா போராட்டம் நடத்துகிறது. பொதுமக்கள் ஆதரவு தருமாறு கேட்டு கொண்டுள்ளது. 

இதுகுறித்து சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஜூலை 15 முதல் 21 வரையான ஒரு வார காலம் தேசமெங்கும் ஊழலுக்கெதிரான மக்கள் பங்கேற்பு இயக்கங்களை நடத்திட இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. ஜூன் மாதம் 19​ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற நான்கு இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சக்தி படைத்த லோக்பால் அமைப்பை உருவாக்குவது nullநீதித்துறையில் ஊழலை ஒழிக்க தேசிய நீnullதித்துறை கமிஷன் அமைப்பது தேர்தலில் பணபலத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்களைக் கோருவது, அரசியல்வாதிகள்​தொழிலதிபர்கள்​அதிகாரிகள் கூட்டின் மூலம் தேசச் சொத்துக்கள் கொள்ளை போவதைத் தடுப்பது, ஊழல் செய்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது. கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது, அந்நிய வங்கிகளில் குவிந்துள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது. ஆகிய ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ, சிபிஐ(எம்), மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் கூடி இந்த இயக்கத்தினை தமிழகம் முழுவதும் சக்தியாக நடத்துவது என முடிவு செய்துள்ளன.

வருகிற ஜூலை 15 முதல் 21 வரையான ஒருவார காலம் முழுவதும் அனைத்து வட்ட தலைநகர்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை தர்ணா போராட்டம் நடத்த சிபிஐ(எம்), சிபிஐ, அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் அறைகூவி அழைக்கின்றன. ஊழலுக்கு எதிரான இடதுசாரிக்கட்சிகளின் இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago