முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒன்று சேர்ந்து குண்டு வெடிப்பை நடத்தியுள்ளனர்

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

மும்பை,ஜூலை.15 - மும்பையில் தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து நடத்தியுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பின்னர் நேற்றுமுன்தினம் மீண்டும் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர். மும்பையில் உள்ள தாதரின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்நிலையம், ஓபர ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தொடர் குண்டுகளை வெடித்தனர். இதில் 17 பேர் பலியானார்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து நடத்தியுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மும்பையில் தீவிரவாதிகள் இந்த நேரத்தில் குண்டு வெடிக்கலாம் என்று புலனாய்வு தகவல் எதுவும் வரவில்லை என்றும் ப.சிதம்பரம் கூறினார். இந்த குண்டுவெடிப்பை எந்த தீவிரவாத இயக்கம் நடத்தியது என்பது குறித்து அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பில் எந்த தீவிரவாத இயக்கம் ஈடுபட்டுள்ளது என்பதை இப்போதே சொல்ல முடியாது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கம்தான் இந்த குண்டுவெடிப்பை நடத்தியிருக்க முடியும். புனே மற்றும் மும்பை நகர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கிடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணையில்தான் தெரியவரும் என்றும் சிதம்பரம் கூறினார். 

தொடர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 23 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 3 இடங்களில் வெடித்த குண்டுகள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தாதரில் பஸ்நிலையத்திலும், ஓபரா ஹவுஸில் ஒரு கட்டிடத்தின் மேல் வைத்து குண்டுவைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளது. ஜவேரி பஜாரில் வெடித்த குண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்கப்பட்ட மாதிரி தற்போது இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு வெளிநாட்டுக்காரரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் ஒருங்கிணைப்பையும் குறி வைத்துதான் தற்போது தொடர் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்றும் ப.சிதம்பரம் மேலும் கூறினார். 

தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் அமைச்சர் ப.சிதம்பரம் அவசரமாக மும்பை புறப்பட்டு வந்தார். மும்பையில் குண்டுவெடித்த இடங்கள் மற்றும் குண்டுவெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்