கறுப்பு பணத்தை ஒழிக்க 5 அம்ச யுக்தி - பிரணாப்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      வர்த்தகம்
Budget6

 

புதுடெல்லி,மார்ச்.1 -  நாட்டில் கறுப்புப்பணத்தை ஒழிக்க 5 அம்ச யுக்தி வகுத்து செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் நாட்டில் கறுப்பப்பணத்தை அடியோடு ஒழிக்க 5 அம்ச யுக்தி வகுத்து செயல்படுத்தப்படும் என்றார். நாட்டில் கறுப்பு பணப்புழக்கம்,கைமாற்றம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

 கறுப்பு பணம் புழக்கத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கறுப்ப பணத்தை ஒழிக்க உலக அளவில் இணைந்து நடவடிக்கை எடுப்பது உள்பட 5 அம்ச யுக்தி வகுத்து செயல்படுத்தப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். கறுப்பு பணம் கைமாற்றம் மற்றும் புழக்கத்தில் விடுவதில் போதைப்பொருள் கடத்தல் தொழில் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது. இதை ஒழிக்க விரிவான முறையில் தேசிய கொள்கை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: